முக்கிய போலீஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்.. உளவுத்துறை ஏடிஜிபி தேவாசீர்வாதத்திற்கு டம்மி பதவி!
சென்னை: உளவுத்துறை ஏடிஜிபி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் முதன்மை செயலர் அமுதா ஐஏஎஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் முக்கியமான ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், இன்று பணியிட மாறுதல் லிஸ்ட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை தமிழக அரசின் உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்கனவே பாலநாக தேவி கூடுதல் பொறுப்பாக வைத்திருந்தார்.
சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அருண், சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர், சென்னை ஆவடி போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் அவர் கவனித்து வந்த பொறுப்புகள் உளவுத்துறை ஐஜி செந்தில் வேலனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக சில சம்பவங்களில் உளவுத்துறையின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications