அன்பில் மகேஷை வளைக்க பிளானா? அரசகுமார் தந்த வாக்குமூலம்! முத்துக்குமாருக்கு வலைவிரிக்கும் உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பான 420 ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோ ஆதாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்கு எதிராக ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதனிடையே, தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாரை பிடிக்கவும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக பிரத்யேகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி பார்ப்போம்...!!

தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரினீவல் பண்ணுவது, புதிய பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத்தருவது உள்ளிட்ட விவகாரங்களில் நடந்த 420 ஊழல்களுக்கான ஆதாரங்கள் அம்பலமாகி வருகிறது.

Anbil Mahesh Tamil Nadu Corruption Case Intelligence Investigation

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசக்குமாரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகளை அன்பில் மகேஷுக்கு எதிராக சொல்லி விட்டார். வழக்கில் இரண்டாவது குற்றவாளியான முத்துக்குமார், தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது இடத்தை மோப்பம் பிடித்து வைத்துள்ளது தமிழக உளவுத் துறை.

அன்பில் மகேஷ் - முத்துக்குமார்

இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று அழுத்தமாக நம்பும் அன்பில் மகேஷ், முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இப்போது, அன்பில் மகேஷுக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள், முத்துக் குமாரின் உதவியாளர் மூலமாகவே சோசியல் மீடியாக்களில் ரிலீசாகி வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இந்த உதவியாளரிடம் ஏற்கனவே அன்-அஃப்பீஷியலாக விசாரித்து முடித்திருக்கிறது.

கடந்த 2 நாட்களாக அம்பல மாகி வரும் ஆதார வீடியாக்களை சோசியல் மீடியாக்களில் ரிலீஸ் செய்யச் சொன்னதே தவெக அரசு தான் என்கிற சீக்ரெட் தகவலும் நமக்கு கிடைக்கிறது. காரணம், அன்பில் மகேஷை கைது செய்ய வேண்டிய திட்டத்தில் இருக்கும் தவெக போலீஸ், அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் கிடைத்து விடக்கூடாது என நினைக்கிறது.

முன்ஜாமீன் கிடைக்குமா?

26-ந்தேதி வரும் இந்த முன் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டால் அதன் பிறகு கைது செய்யலாம் என முடிவில் தவெக அரசு இருப்பதால், அன்பில் மகேஷ்க்கு எதிரான வீடியோ ஆதரங்கள் பொது வெளியில் ரிலீஸ் ஆகும்போது அதனை பரிசீலித்து முன் ஜாமீனை அவருக்கு வழங்காமல் கூட நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யலாம். அதனால் தான் இந்த வீடியோ ஆதாரங்கள் வெளியாகியிருக்கிறது என்று திமுக தரப்பில் விவாதிக்கப்படுகிறது.

அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனு கேன்சல் ஆகும் பட்சத்தில் அவரை கைது செய்ய தீர்மானித்துள்ள அதே வேளையில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள முத்துக்குமாரையும் கைது செய்யும் தீவிரத்தில் இருக்கிறதாம் தவெக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை.

டர்னிங் பாயிண்ட்

மொத்தத்தில், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பான இந்த ஊழல் வழக்கு அடுத்தகட்டமாக எந்த திசையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது... அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு, இந்த வழக்கில் டர்னிங் பாயிண்ட்டாக அமையலாம். அதேபோல், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் பிடிபட்டால், இந்த விவகாரத்தில் மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது....!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+