கொளுத்தும் வெயில்.. விஜய் வரும்முன்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த தவெக தொண்டர்கள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல்துறையின் கொடூர தாக்குதல் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சிவானந்தா சாலையில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் வெயில் தாக்கத்தையும் கண்டுகொள்ளாமல் ஆயிரக்கணக்கான தவெகவினர் குவிந்திருக்கின்றனர். இதனிடையே வெயில் தாக்கம் காரணமாக தவெக தொண்டர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில், அவருக்கு உடனடியாக ஆம்புலன்ஸ்-க்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவல்துறையின் கொடூர தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தவெக சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அரசியல் களத்திற்கு வந்தபின் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ள ஆர்ப்பாட்டம் என்பதால், அக்கட்சியினர் குவிந்து வருகின்றனர்.

Vijay tvk police

சிவானந்தா சாலையில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான தவெகவினர் குவிந்துள்ளனர். காலை முதலே கொளுத்தும் வெயிலை கண்டுகொள்ளாமல் தவெகவினர் பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர். அதற்கேற்ப விஜயும் கருப்பு டீ-ஷர்ட் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

"சாரி வேண்டாம்.. நீதி வேண்டும்" என்ற பதாகையுடன் விஜய் மேடையில் நின்றிருக்கிறார். அவருடன் காவல்துறை மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மேடையில் ஏறி இருக்கின்றனர். இதனிடையே அதிக வெயில் காரணமாகவும், கூட்டம் காரணமாக தவெக தொண்டர்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே கூட்டத்தில் தவெகவின் ஒரு தொண்டர் மயக்கம் அடைந்தார்.

அவருக்கு உடனடியாக ஆம்புலன்ஸ்-க்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தவெக தொண்டர்களுக்கு தேவையான தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவெகவின் ஆர்ப்பாட்டத்திற்கு விஜய் வந்திருப்பதால், அவரின் ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் ஆவேசத்துடன் இருக்கின்றனர்.

10 மணிக்கு போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 8 மணி முதலே சிவானந்தா சாலையில் தவெக தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தவெக தொண்டர்கள் போராட்டத்தில் இணைய முயற்சித்தனர். அவர்களை அந்தந்த பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+