பிற ஜாதி பெண்களை கட்டியணைப்போம் என வாலிபர் உறுதிமொழி.. வைரலாகும் வீடியோ.. தமிழிசை பதில் இதுதான்
Recommended Video

சென்னை: கலப்பு திருமணம் என்பது கட்டாயப்படுத்தி வரக்கூடாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
அம்பேத்கர் படத்தின் முன்பாக நின்று கொண்டு, இளைஞர் ஒருவர், சில குறிப்பிட்ட ஜாதிகளை குறிப்பிட்டு அந்த ஜாதி பெண்களை கட்டுவோம், கட்டியணைப்போம் என்று உறுதிமொழி எடுப்பதை போலவும், அதற்கு பதிலுக்கு பிற இளைஞர்கள் வழிமொழிவதை போலவும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோ குறித்து தமிழிசையிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:
கலப்பு திருமணம் செய்வதை எதிர்க்கவில்லை. ஜாதி ஒழிய, கலப்பு திருமணத்தை ஆதரிப்பதாக காந்தியே கூறியுள்ளார். ஆனால், கலப்பு திருமணம், இயல்பாக வர வேண்டும். இயக்கி வரக் கூடாது. கண்டபடியோ, கட்டாயப்படுத்தியோ வரக்கூடாது. அன்பால் இயல்பாக வர வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு நடப்பதை ஏற்க முடியாது.
ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தபோது, மீத்தேன் ஆய்வுக்கு கையெழுத்திட்டார். அதுபோல மேகதாது ஆய்வுக்குதான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை.
வைகோ, முதலில் துரைமுருகனோடு சண்டையிட்டார். தற்போது, திருமாவளவனுடன் சண்டைபோடுகிறார். வைகோவின் சண்டைகளால் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications