செல்வமகள் சேமிப்பு திட்டம்.. அதிகாலையே வந்த ஷாக் செய்தி.. ஒரு இன்ச் கூட நகராது.. வெளியான தகவல்
சென்னை: அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலாண்டிற்கான அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசு மாற்றமில்லாமல் வைத்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்களுக்கு இது பொருந்தும்.
அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளால் நிர்வகிக்கப்படும் இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் பல காலாண்டுகளாக மாறாமல் உள்ளன. கடைசியாக 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சில திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு காலாண்டிலும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு அறிவிக்கும் வழக்கம் தொடர்கிறது.

செல்வமகள் சேமிப்பு - திட்டம்
சமீபத்திய அறிவிப்பின்படி, பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1% மற்றும் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7.7% வட்டி விகிதங்கள் தொடர்ந்து வழங்கப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கும், சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கும் 8.2% வருமானம் கிடைக்கும். இத்திட்டங்கள் பொதுவாக அஞ்சல் அலுவலக திட்டங்கள் என குறிப்பிடப்படுகின்றன.
பெண்களுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மாற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இதில் இந்த காலாண்டில் மாற்றம் இல்லை. ஜனவரி 22, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பெண்களின் சேமிப்பை ஊக்குவித்து, அவர்களின் உயர்கல்வி, திருமணம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் - வட்டி விகிதம் எவ்வளவு?
மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிமுகப்படுத்திய பல்வேறு சேமிப்புத் திட்டங்களில், செல்வமகள் சேமிப்புத் திட்டம் தனித்துவமானது. பெண்களின் எதிர்கால நலனை மையமாகக் கொண்டு, குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தால், பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விளைவாக, முதலீடு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 11,16,815 வரை சேமிக்க முடியும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இக்கணக்கைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை அடைந்ததும், கணக்கு அவர்களின் பெயருக்கு மாற்றப்படும். இத்திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடைந்த தொகையைப் பெறலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்
மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உதாரணமாக, மாதம் ரூ. 2,000 முதலீடு செய்தால், 21 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 11.16 லட்சம் பெற முடியும். இத்திட்டத்தைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை; வெறும் ரூ. 250 இருந்தாலே முதலீட்டைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ரூ. 50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் முதலீடு செய்யத் தேவையில்லை; மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு, டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் பயன்கள்
இத்திட்டத்தில் கணக்கு தொடங்கிய பெண் வெளிநாட்டிற்குச் சென்று குடியுரிமை பெற்றால், வட்டி நிறுத்தி கணக்கு மூடப்படும். 21 ஆண்டுகள் வரை வெளிநாட்டில் பணிபுரியலாம், ஆனால் குடியுரிமை பெற முடியாது. மேலும், கணக்குதாரர் பெண் இறந்துவிட்டால், வட்டி நிறுத்தப்பட்டு, கணக்கு மூடப்பட்டு, மீதமுள்ள தொகை பாதுகாவலருக்கு அல்லது பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.
அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ இக்கணக்கைத் தொடங்கலாம். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தைச் செலுத்தலாம். மாதம் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டமாக விளங்குகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications