சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடிக்கு புகழாரம்.. பட்ஜெட்டில் ஒபிஎஸ் வெளியிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள்.. விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் தலைவர் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இயற்கையாக இறந்தால் 2 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் கூட்டத்தொடர் நடந்தது. இதில் விதி எண் 110ன் கீழ் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த கூட்டத்தை திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

இந்தநிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது.

தமிழக மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு ஹைகோர்ட் அனுமதி தமிழக மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு ஹைகோர்ட் அனுமதி

இடைக்கால பட்ஜெட்

இடைக்கால பட்ஜெட்

துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் தலைவர் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இயற்கையாக இறந்தால் 2லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சிறந்த நிர்வாகி

சிறந்த நிர்வாகி

கடந்த நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை 4.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது நிதியமைச்சரின் அறிவிப்பில் தெரியவந்துள்ளது. பட்ஜெட்டை உரையை தொடங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிறந்த நிர்வாகி என்று வெகுவாக பாராட்டினார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்

பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரத்தை இப்போது பார்க்கலாம். மின்துறை, 7217 கோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6683 கோடி, உயர்கல்வித்துறை 5478 கோடி, பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3,700 கோடி நிதி ஒதுக்கீடு, நெடுஞ்சாலை துறைக்கு ரூ18,750 கோடி நிதி ஒதுக்கீடு.

காவல்துறை

காவல்துறை

2000 மின்சார பேருந்துகள் உள்பட 12000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தமிழகத்தில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும். மீன்வளத்துறைக்கு ரூ580 கோடி நிதி ஒதுக்கீடு, உள்ளாட்சி துறைகளுக்கு ரூ22,218 கோடி நிதி ஒதுக்கீடு, காவல்துறைக்கு ரூ9,567 கோடி நிதி ஒதுக்கீடு, நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ1,437 கோடி ஒதுக்கீடு, நீர்வள துறைக்கு ரூ6,453 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Interim budget to be tabled in the Tamil Nadu Assembly today. Deputy Chief Minister O. Panneerselvam will file the budget at 11 am today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X