சிக்கலில் ஜிகே மணி..வெளியே தலை காட்டாத முகுந்தன்! ஒட்டுமொத்தமாய் கொதிக்கும் பாமக! என்னதான் நடக்குது?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரான ஜிகே மணிக்கு எதிராக அக்கட்சி தொண்டர்களே சமூக வலைதளங்களில் அவரை நீக்க வேண்டுமென பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஜிகே மணியால் தான் கட்சியில் பிரச்சனை என கூறுகின்றனர். மேலும் கட்சியின் இளைஞர் அணி தலைவரான ராமதாஸின் பேரன் முகுந்தனையும் நீக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சி கூட்டணியில் இணையப் போகிறது என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பு.
திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம் என பாமக தரப்பு நினைக்கிறது. அதே நேரத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் பாமக இணையலாம் எனவும், தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைக்கலாம் எனவும் இருவேறு தகவல்கள் உலாவுகின்றன.

இது ஒரு புறம் இருக்க பாமக அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்லக்கூடாது என திமுக விரும்புவதாகவும் இதற்கு ஜிகே மணியை பயன்படுத்தி வருவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ராமதாஸின் வயது மற்றும் அவரது குடும்பத்தினரை வைத்துக்கொண்டு அன்புமணிக்கு எதிராக ஜிகே மணி காய் நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் ஜிகே மணி வரவேற்பு தெரிவித்து பேசியதோடு அவருக்கு முத்தமிழறிஞர் என பட்டம் வைத்ததே நான் தான் என பேசியது பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
தொடர்ந்து பாமகவில் இருந்து கொண்டே திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஜிகே மணியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். இதற்குப் பின்னணியில் இளைஞர் அணி தலைவர் பதவி தான் இருக்கிறது என்கின்றனர் அந்த கட்சியை சேர்ந்தவர்கள். பாமக இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் ஜிகே மணி வகித்து வந்த பதவியை பெற்று பாமக தலைவர் ஆனார்.
இதனால் அன்புமணி வகித்து வந்த பாமக இளைஞர் அணி தலைவர் பதவியை தனது மகன் தமிழ் குமரனுக்கு வாங்கி கொடுத்தார் ஜிகே மணி. அதற்கு பிறகு லைகா ப்ரெடக்சன்ஸில் பிசியாக இருந்ததால் கட்சி பணிகளை கவனிக்க முடியாததாலும் தமிழ்குமரன் தனது பதவியில் இருந்து அவராகவே விலகிக் கொண்டார். ஆனால் அன்புமணியால் தான் தனது மகனின் பதவி போனது என அன்புமணிக்கு எதிராக ஜிகே மணி செயல்படுகிறார் என கூறப்படுகிறது.
மேலும் அன்புமணியின் ஆதரவாளர் கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமதாசின் மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அந்த மேடையிலேயே ராமதாசுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் வெடித்தது. கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது.. அவனுக்கு இளைஞர் சங்க தலைவர் பதவியா? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்? என அன்புமணி வெளிப்படையாகவே பேசினார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட ஜிகே மணி ராமதாஸிடம் ஒன்றுக்கு இரண்டாக போட்டுக் கொடுத்து விட்டார் என்கின்றனர். தன்னை எதிர்த்து மகன் செயல்படுகிறார் என நினைத்த ராமதாஸ் அடுத்தடுத்து தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறாராம். அதே நேரத்தில் பாமகவின் முக்கிய பதவியைப் பிடித்த முகுந்தன் இதுவரை கட்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை. 2024 மார்ச் மாதத்தில் பாமக சமூக ஊடகப் பேரவையின் தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்டாலும் அப்போதிலிருந்து இப்போது வரை சீரியஸாக எந்த கட்சிப் பணியிலும் ஈடுபடவில்லை.
ஆனால் கட்சியில் உழைத்த இளைஞர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் இருக்க அவர்களுக்கு பதவி தர வேண்டும் என்பது அன்புமணியின் விருப்பம். ஆனால் ராமதாஸின் பேரனுக்கு கொடுக்க வேண்டும் என ஜிகே மணி தான் ஐடியா கொடுத்தார். இதனால் தான் தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. திமுக அனுதாபியான ஜிகே மணியையும், கட்சி பணி செய்யாத முகுந்தனையும் வெளியேற்றி விட்டால் பாமகவில் பிரச்சனை இருக்காது என்கின்றனர் பாட்டாளிகள்.
-
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications