உடையுது தவெக? இரண்டாக நிற்கும் இரண்டாம் கட்ட தலைகள்! இருதலைக் கொல்லி எறும்பாக விஜய்! எகிறும் பிர்ஷர்
சென்னை: அதிமுக -பாஜக கூட்டணியில் புதிய கட்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைய உள்ளதாக பேசப்பட்டு வரும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கூட்டணி குறித்த முடிவை இதுவரை விஜய் வெளிப்படையாக - அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ஒரு சிலர் தமிழக வெற்றிக் கழகம் பாஜக கூட்டணிக்கு செல்லலாம் எனவும், ஒரு சிலர் வேண்டாம் என மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி நேர பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது 2026 தமிழக சட்டசபை தேர்தல் களம். திமுக கூட்டணி உடையும் என எதிர்பார்த்த எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்ததோடு எதிர்பாராத விதமாக தேமுதிக கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின்.
மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி இன்னும் டேக் ஆஃப் ஆகாமல் இருக்கிறது. பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வந்திருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. விஜய் கூட்டணிக்கு வரலாம் என சொல்லப்படும் தகவல்களே இதற்கு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

விஜய் தவெக
விஜய் தனியாக போட்டியிட்டால் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பார். இது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதால் விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் அழைத்து வரவேண்டும் என்பது அமித் ஷாவின் எண்ணம். இதற்காக கரூர் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களை விஜய்க்கு கொடுத்து வருவதோடு சில அரசியல் தலைவர்கள் மூலம் நேரடியாக பேச்சு நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இன்று சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்கிறார் விஜய்.
பாஜக கூட்டணி
நாளை விசாரணைக்கு ஆஜராகும் நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தால் பாஜக தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணி உறுதி தான் என்கின்றனர். சொல்லப் போனால் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக -பாஜக கூட்டணிக்கு வந்தால் வெற்றி உறுதி என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதைத்தான் பாஜகவும் சொல்லி வருகிறது. அதே நேரத்தில் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என வெளிப்படையாக விஜய் முதல் மாநாட்டிலேயே பிரகடனம் செய்ததோடு அடுத்தடுத்த நிகழ்வுகளில் பாஜகவை மென்மையாகவே விமர்சித்து வருகிறார்.
அமித் ஷாவின் ஆஃபர்
இதனால் கொள்கை முக்கியமா? தேர்தல் முக்கியமா? என்ற யோசனையில் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. கூட்டணிக்கு வந்தால் 40 சீட்டு, துணை முதல்வர் பதவி அல்லது 2.5 ஆண்டு காலம் முதல்வர் என பல்வேறு ஆபர்களை அமித்ஷா கொடுத்திருக்கும் நிலையில் விஜய் தலையசைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பாஜக வட்டாரங்களில் நிலவுகிறது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் இரு அணிகள் உருவாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
புஸ்ஸி ஆனந்த்
கடந்த சில நாட்களுக்குள் மாவட்ட செயலாளருடன் புஸ்ஸி ஆனந்த் மீட்டிங் நடத்திய நிலையில் ஒரு சிலர் ஆப்சென்டாகி இருக்கிறார்கள். 110 மாவட்ட செயலாளர்களின் 90 பேர் பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தயார் என்றும் சிலர் சொன்னார்களாம். ஆனந்த், ஆதவ், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் கூட்டணி வேண்டாம் தனித்து தேர்தலை சந்திப்போம் என சொல்லுகிறார்களாம்.
ஜான் ஆரோக்கிய சாமி
ஒரு பக்கம் அரசியல் எதிர்காலம், மறுபக்கம் கடைசி படம் ஜனநாயகம் என சிக்கலில் இருக்கும் விஜய் அரசியல் பயணத்துக்கு சரியானது பாஜக தான் எனும் இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சைக் கேட்பாரா? அல்லது தனித்து போட்டியிட்டு வாக்கு வங்கியை நிரூபித்து 2031 சட்டமன்ற தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஜான் ஆரோக்கிய சாமியின் பேச்சை கேட்பாரா? என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் தேர்தலை சந்திப்பதற்குள் இரு அணிகள் உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பரபரப்பு அடங்குமா? அல்லது மேலும் பரபரப்பாக மாறுமா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.
-
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி












Click it and Unblock the Notifications