’ஜான்’ ஏறுது..”ஆனந்த’ம் சறுக்குது! பனையூர் பார்ட்டியில் பஞ்சாயத்து! அண்ணனின் விழுதுகளுக்குள் விரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்பது போல கட்சிகளுக்குள் உட்கட்சி மோதல் என்பது சகஜம் தான். ஆனால் தமிழகத்தில் இரண்டு கட்சிகளில் உச்சத்தில் இருக்கிறது உட்கட்சி மோதல் என்கின்றனர். முன்னாள் ஆளுங்கட்சி ஒன்றில் அடிதடி அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக பிரசிவித்த கட்சி பாலிடிக்ஸ் பஞ்சாயத்தால் சிக்கித் தவிக்கிறது என்கின்றனர்.

அண்ணனின் உண்மையான விழுது நான் தான் என்பதில், 'ஐடியா' கொடுப்பவர்க்கும், ஆட்சியில் இருப்பவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளதாம். இதனால் கட்சியில் "ஜான் ஏறினால்.. முழம் சறுக்குது.. 'ஆனந்தமே' இல்லை என்கின்றனர் பனையூர் தம்பிகள்.

Panaiyur Politics

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது தமிழக அரசியல் களம். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வென்று தனது கரங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் ஆளுங்கட்சி தோல்வியடைந்தாலும் தாங்கள் வெற்றி பெற்றோம் என சொல்லிவிட்டது.

அதற்கு முன்னாள் ஆண்ட கட்சியில் தான் கலவரம் நடந்து வருகிறது. 'பொது'வானவரைவை குறி வைத்து மாஜிக்கள் அடி மேல் அடி கொடுத்து வருவதால் கலங்கிப் போய் இருக்கிறாராம். இதையெல்லாம் விட தமிழக அரசியலில் புதிதாக களம் புகுந்த கட்சி யார் அண்ணனின் வலது கரம்? என்பதற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்கின்றனர்.

தலைவராக இருக்கும் அண்ணனுக்கு 'ஐடியா' கொடுப்பவருக்கும், பல்லாண்டுகளாக 'நம்பர் டூ' ஆக இருந்து வரும் 'ஆனந்தம்' ஆனவர்க்கும் பஞ்சாயத்து என்கின்றனர். கட்சியிலும் ஆட்சியிலும் நான்தான் நம்பர் டூ என ஆனந்தம் சொல்லிக் கொள்ள.. ஆரோக்கியமானவர் அதனை ரசிக்கவில்லையாம். போதாக்குறைக்கு தலைவரும் ஆரோக்கியமானவரை கூடவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் ஐடியா கொடுத்தால் ஜான் ஏறினால் முழம் சறுக்குது கதையாக தான் இருக்கிறது என்கின்றனர். ஐடியாவின் பேச்சைக் கேட்டு ஆர்டர் போட்டால் அது அண்ணனுக்கே பேப் ஃபயர் ஆகுதாம். கட்சியிலும் இதே நிலை தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக கட்சியை பார்த்து பார்த்து செதுக்கி அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கே ஆப்படிக்கப் பார்க்கிறார் ஆரோக்கியமானவர் என புலம்பி வருகிறாராம் ஆனந்தமானவர்.

இதற்கிடையே அளவுகோல் பெயர் கொண்டவரின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்த சிலர் முக்கிய புள்ளிகள் அவரிடம் தற்போது ஐடியா கேட்டு வருகிறார்களாம். இதனை தெரிந்து கொண்ட ஆனந்தமானவர் என் வழி தனி வழி என சென்று வருகிறார் என்கின்றனர்.

மேலும் மாவட்ட அளவிலும் இதே பஞ்சாயத்து என்கின்றனர். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் கட்சியில் இருப்பவர்களை மதிப்பதில்லை.. கட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களை மதிப்பதில்லை என பஞ்சாயத்து ஒருபுறம் சென்று கொண்டிருக்க.. அந்தப் பதவி தருகிறேன் இந்த பதவி தருகிறேன் என கல்லாக் கட்டவும் ஆரம்பித்திருக்கிறார்களாம் சில மாவட்ட செயலாளர்க:.

இதற்கிடையே நான் தான் இளைஞர் அணி.. நான்தான் மகளிர் அணி என தனித்தனி கோஷ்டிகளும் கிளம்பி மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக களமாடி வருகிறார்கள். கட்சியிலும் பிரச்சனை ஆட்சியிலும் இத்தனை பிரச்சனையா? நான் இதுக்கு பேசமா சூட்டிங்கே போயிருப்பேன்! என 'அண்ணன்' செம கோபத்தில் இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+