சர்வதேச வேட்டி தினம்.. மடிச்சு கட்டி கிளம்பிய இளைஞர்கள்.. செல்பி எடுத்தும் உற்சாகம்
சென்னை: பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் வேட்டி அணிந்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதில் விருப்பம் காட்டுவது இல்லை. மாறி வரும் தற்கால சூழலுக்கேற்ப தங்கள் உடைகளை மாற்றி வருகின்றனர். அதில் இளைஞர்கள், யுவதிகள் நவநாகரீக உடைகளை ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

நாகரீக உடைகளை நாடும் தலைமுறை
கல்லூரிகள், விழாக்கள் உள்ளிட்ட பல விசேஷங்களிலும் நவ நாகரீக உடைகளுடன் வலம் வரும் பலரை நாம் அதிகமாக காணமுடிகிறது. இந் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அங்கீகரிக்கும் விதமாக, யுனெஸ்கோ நிறுவனம் ஜனவரி 6 ம் தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது. நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இன்று வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது.

வேட்டியில் காட்சியளிக்கும் ஆண்கள்
இதையடுத்து, வேட்டி தினத்தைக் கொண்டாடும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் பல ஆண்கள் வேட்டி அணிந்துள்ளனர். ஆண்கள் மட்டுமல்லாது, சிறுவர்களும் வேட்டி அணிந்து காட்சியளிக்கின்றனர். முன்பெல்லாம் வேட்டி கட்டுவதில் உள்ள சிரம, பயணிக்கும் உண்டாகும் அசௌகரியங்கள் காரணமாக இளைய தலைமுறையினர் அதை அணிவதை முற்றிலும் தவிர்த்து வந்தனர்.

வேட்டிதான் வித்தியாசமான உடை
ஆனால் காலச்சூழ்நிலைகள் மாற, மாற வித்தியாசமான உடைகள் பட்டியலில் தங்களுக்கு பிடித்தமானது வேட்டிதான் என்று அவர்கள் கூறும் அளவுக்கு காலம் தற்போது மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு உதாரணம்... கல்லூரிகளில் நடைபெறும் பேஷன் ஷோக்களில் வேட்டி அணிந்து வலம் இளைஞர்களுக்கு விழும் கரவொலிகளும், விசில் சத்தங்களை கூறலாம்.

வேட்டிகளில் புதிய வகை
வீதிகளில் வேட்டியுடன் நடமாடுவதை கண்டு எள்ளி நகையாடிய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பி அணியும் ஆடைகளில் முக்கியமானதாக பார்ப்பது வேட்டிதான். அதிலும், இளைய தலைமுறையினரின் அசவுகரியத்தை உணர்ந்த ஜவுளி நிறுவனங்கள் எலாஸ்டிக் வகையான வேட்டிகளை அறிமுகப்படுத்த.. உற்சாகம் பொங்கியது இளைஞர்களுக்கு.

கல்லூரி மாணவர்கள் வரவேற்பு
அந்த வகைகளில் வேட்டிகளில் பெல்ட் மாடல், செல்போன் வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பாக்கெட் என பல புதிய மாடல்களும் இளைஞர்களை வேட்டி அணியும் பார்வைக்கு மாற்றியுள்ளது எனலாம். கல்லூரி மாணவர்களிடையே இந்த மாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

செல்பி எடுத்து மகிழ்ச்சி
இருப்பினும், தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாப்பத்தில் அதிக முக்கியத்துவம் தருவது அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளதாக 50களை கடந்தவர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர். சமூக வலைத் தளங்களிலும், பலர் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருப்பதை செல்பி எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

பாரம்பரியத்தை காக்க அழைப்பு
ஆக.. பாரம்பரியத்தை காக்க வாங்க.. என்ற அழைத்தால் யார் வருகிறோர்களோ.. வரவேற்பு தெரிவிக்கிறார்களோ இல்லையோ.. நமது இளைய தலைமுறையினர் வந்துள்ளனர் என்பதை அவர்கள் வேட்டி தினத்தை கொண்டாடுவதில் இருந்து நாம் காணலாம்.. அதை நாமும் கொஞ்சம் வேட்டியை மடிச்சு கட்டியே சொல்லலாம்..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications