தான் தானாக வாழத் தெரிந்த அந்த அவளுக்கு...உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
சென்னை : உலக மகளிர் தினமான இன்று, பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். தன்னை சுயமாக நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு நொடியும் போராடும் பெண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்...

எனக்கு ஒருத்தியை தெரியும்...
அவளுக்கு தன்மான உணர்வு அதிகம்...
உலகம் அதை தலைக்கணம் என்றது.
அவளுக்கு உரிமை உணர்வு அதிகம்...
உலகம் அவளை வாயாடி என்றது.
அவளுக்கு ஆர்வம் அதிகம்...
உலகம் அதை ஆணவம் என்றது.
அவளுக்கு திறமை அதிகம்...
உலகம் அதை திமிர் என்றது.
அதெற்கெல்லாம் அஞ்சி நின்றுவிட்டால்....
அவள் அவளில்லையே...!!
எனக்கு இன்னொருத்தியை தெரியும்...
குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிந்தவள் அவள்...
உலகம் அவளை குணம் கெட்டவள் என்றது.
சாதிப்பதற்காக சாஸ்திரங்களை தூக்கி எறிந்தவள் அவள்...
உலகம் அவளை குறையுடையவள் என்றது.
உரிமைக்காக உடைமைகளை இழந்தவள் அவள்...
உலகம் அவளை முட்டாள் என்றது.
சமூகத்திற்காக தன்னையே தியாகம் செய்தவள் அவள்...
உலகம் அவளை அடங்காதவள் என்றது.
அதெற்கெல்லாம் அஞ்சி நின்று விட்டால்....
அவள் அவளில்லையே...!!
எனக்கு மற்றொருத்தியையும் தெரியும்.
அடுத்தவர் நலம் காக்க அமைதி காக்க தெரிந்தவள் அவள்...
உலகம் அவளை ஊமை என்றது.
கணவனுக்காக தன்னையே தொலைத்தவள் அவள்...
உலகம் அவளை பழமைவாதி என்றது.
குழந்தைகளை மேதையாக்க பேதையானவள் அவள்...
உலகம் அவளை ஒன்றும் தெரியாதவள் என்றது.
உறவுகளையே தனது உலகமாக்கிக் கொண்டவள் அவள்...
உலகம் அவளை தகுதியில்லாதவள் என்றது.
அதெற்கெல்லாம் அஞ்சி நின்றுவிட்டால்...
அவள் அவளில்லையே...!!
எனக்கு தெரிந்த அந்த அவளை...அந்த ஒருத்தியை...
உங்களுக்கும் தெரியும்.
தனக்கான பாதையை சரியாக வகுத்த பின்...
தான் தானாகவே வாழ தெரிந்த அந்த ஒருத்தியை...
அந்த ஒருத்தியாக...வாழ்த்துகிறேன்...வணங்குகிறேன்...!!
நீங்களும் அவளை...அந்த ஒருத்தியை...வாழ்த்துங்கள்...வணங்குங்கள்...!!
இயலவில்லையா?
குறைந்தபட்சம் வழிவிடுங்கள்...அவள் முன்னேறட்டும்...!!
- ஆரா அருணா
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications