மே 1..தொழிலாளர்கள் தினம்..கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சென்னை: மே 1ஆம் தேதியான இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, இந்த நாட்டுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் மேன்மையை உலகறிந்த நாள். அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்த நாள். கல்லுடைக்கும் தொழிலாளி முதல் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் இனிய மே தின உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்களை ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
மே 1ஆம் தேதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாள். தொழிலாளர் தினம், பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். எட்டு மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாள். அப்படிப்பட்ட மே தினம் 1923ம் ஆண்டு இந்தியாவில், தமிழகத்தில் சென்னையில் தான் முதல்முறையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுடன் சென்னையில் முதல் முதலாக மே தினம் கொண்டாடி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.

1923ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மே தின விழாவை கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் தோழர் சிங்காரவேலு. 1923ம் ஆண்டு மே தின கொண்டாட்டத்தை சென்னையில் இரண்டு இடங்களில் நடத்தினார் தோழர் சிங்காரவேலு. மே தினமான அரசியல் கட்சித்தலைவர்களும் பொதுமக்களும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

செங்குருதியை வியர்வையாக்கி, உழைப்பையே மூச்சாக சுவாசித்து, தேசத்தின் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் "நூற்றாண்டு மே தினம்" நல் வாழ்த்துகள். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி, ஆசியாவிலேயே முதன் முதலில் மே தினத்தை கொண்டாடிட காரணமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார் உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகளை இந்நன்னாளில் நன்றியோடு நினைவு கூர்வோம்
நூறாண்டுகளுக்கு முன் போராடிப் பெற்ற 8மணி நேரம் வேலை என்கிற உரிமையை பறிக்க எவர் நினைத்தாலும் ஒன்றுபட்டு அதனை முறியடிப்போம், தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனிதராய்ப் பிறந்த அனைவரும் கடுமையான உழைப்பின் மூலமே அன்றாட வாழ்வினை நகர்த்திச் செல்கின்றனர்.உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள் என்று ஒரு தொழிலாளர் பதிவிட்டுள்ளார்.
உழைப்போம் உயர்வோம், உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயக்க வைக்கும் உன்னத தோழர்களுக்கு..இனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் ஒரு தொழிலாளி.

நாடும் வீடும் வளம் பெற்று முன்னேறிட நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் ..! உழைப்பே உயர்வு தரும் !! உழைப்பின்றி உயர்வில்லை !! உழைப்பவரே உயர்ந்தவர் !!! என்றும் பதிவிட்டுள்ளார் ஒரு தொழிலாளி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications