Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவப்பு vs நீலம்.. நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கம்யூ. மீது விமர்சனமா? கே பாலகிருஷ்ணன் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கையில், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே இதில் இடம்பெற்றிருந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படம் 'A' தரச்சான்றிதழுடன் வெளியானது.

ஆனால் படத்தில் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து சர்ச்சை கருத்துக்கள் கூறியிருப்பதாக சிபிஎம் தரப்பில் தொடர் விமர்சனங்கள் மேலெழுந்தன. இந்நிலையில் இது குறித்து தனது பேட்டியில் சிபிஎம் மாநில செயலாளர் முக்கிய கருத்துக்களை கூறியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரை கொண்டு 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இதற்கு முன்னரும் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட தனது படங்களில் சாதி வன்முறை மற்றும் ஆதிக்கம் என சாதி அரசியலை விரிவாக பேசியிருக்கிறார் பா.ரஞ்சித். அந்த வகையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப்போலவே படமும் சிறப்பாக அமைந்ததாக விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விமர்சனங்களையும் கடந்து, கம்யூனிஸ்ட்டுகள் குறித்து படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இந்த படத்தின் மீது மற்றொரு குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

பேட்டி

பேட்டி

விடுதலை போராட்ட வீரர் வஉசி பிறந்த தினமான இன்று, பாரதி புத்தகாலயம் சார்பில் 1947ல் செய்யுள் வடிவில் வெளியாகியிருந்த வஉசியின் தன் வரலாற்று நூலை உரைநடை சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார் பாலகிருஷ்ணன். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்திய சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு போராடியவர் வஉசி. அதற்காக தனது சொத்துகளை அவர் இழந்தார். ஆங்கிலேயர்களின் வியாபாரத்தில் ஆணி அடிக்க வேண்டும் என்பதால், தனது சொத்துக்களை விற்று கப்பலை வாங்கி ஓட்டினார்.

கோரிக்கை

கோரிக்கை

மட்டுமல்லாது அவர் ஒரு தலை சிறந்த எழுத்தாளர், தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர். கடந்த சுதந்திர தின பேரணியின் போது பேரணி வாகனத்தில் வஉசி-யின் புகைப்படம் இடம்பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இது வஉசி-யை போன்று விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னுக்கு நிறுத்துவதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்துகிறது. வஉசி காலத்தில் நடைபெற்ற விடுதலை போராட்ட வரலாறுகளை தமிழ்நாடு பாட நூல்களில் சேர்த்து, அவரின் விடுதலை போராட்ட வரலாறை குழந்தைகள் தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

கம்யூனிஸ்ட்களின் பங்கு

கம்யூனிஸ்ட்களின் பங்கு

பின்னர் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "கம்யூனிஸ்ட்டுகள் சாதி ஒழிப்பிற்கு எதுவும் செய்யவில்லை என ஒரு திரைப்படத்தில் சொல்வதால், கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றியிருக்கும் மகத்தான பங்களிப்பை வரலாற்றில் இருந்து யாராலும் அழித்து விட முடியாது." என்று கூறினார். மேலும், தான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்றும் பார்த்த பின்னர் கருத்து மேலதிக கருத்து கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+