தமிழக மாணவர்களுக்கு நல்ல செய்தி.. ஆன்லைனில் வந்த அற்புதமான வசதி.. அன்பில் மகேஷ் அசத்தல்
சென்னை: தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுத்துறையால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த ஆன்லைன் தளத்தை துவங்கி வைத்துள்ளார்.இதன் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
என்ன நன்மை: அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம்படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், இடப்பெயர்வுச் சான்றிதழ்களை இனி ஆன்லைனிலேய பெற முடியும். பிற மாநிலங்களில் உயர்கல்வி பயில, இணைய வழி விண்ணப்பங்களாக பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தமிழகத்தில் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த திட்டம்: தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் அதாவது ஸ்டேட், மெட்ரிக் (தமிழ் வழி, ஆங்கில வழி) படிக்கும் மாணவர்களுக்கான தேர்வினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி சான்றிதழ்களை வழங்கி வருகிறது. (சிபிஎஸ்சி பாடத்தில் படிப்போருக்கு தேர்வு நடத்தி சான்றிதழ்களை மத்திய கல்வி வாரியம் வழங்குகிறது) தற்பொழுது மாநில பாடத்திட்டத்தல் சான்றிதழ்களின் நகல் வேண்டும் என்றால், அதற்கு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இதனால் அவர்களுக்கான சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சான்றிழ்கள் கிடைக்காமல் இருப்பதால் நேரடியாக தேர்வுத் துறைக்கு வரும் நிலை ஏற்படுகிறது
மாணவர்கள், பொதுமக்கள் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யும் பிழையுடன் பூர்த்தி செய்து விண்ணப்பித்து விடுவதால் அவர்களது விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல் திரும்ப அனுப்பப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இதனால் ஆன்லைனில் இந்த வசதிகளை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்தது.
இதன்படி அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம் படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், பிற மாநிலங்களில் உயர்கல்வி படிப்பதற்கான இடம் பெயர்வு சான்றிதழ் போன்றவற்றிக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் வசதி இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த திட்டத்தினை துவங்கி வைத்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் இந்த இணையதளங்கள் குறித்து கூறுகையில், "பொதுமக்கள் இனி சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சான்றிதழ் அனுப்பி வைப்போம்.மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (Certified Copy of Mark Certificate), இடப்பெயர்வுச் சான்றிதழ் (பிற மாநிலங்களில் உயர்கல்வி பயில) (Migration Certificate For pursuing Higher Education in) இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு E-Certificateஆக அனுப்பி வைத்துவிடுவோம்.
விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை விண்ணப்பத்தாரர்கள் அறியும் வசதியும், விண்ணப்ப எண்ணைக் கொண்டு விண்ணப்ப நிலை குறித்த விவரங்கள், விண்ணப்பத்தில் மாணவர்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய நடைமுறை காரணமாக விண்ணப்பத்தில் அடிப்படை விவரங்கள் சமர்ப்பிக்கவில்லை மற்றும் பூர்த்தி செய்யாமல் விடப்பட்டுள்ளது போன்ற காரணங்களுக்காக விண்ணப்பத்தை நிராகரிக்கும் நிலை முற்றிலும் இருக்காது. மாணவர்கள், மக்களுக்கு சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதுடன், வீண் காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications