வில்லனாகும் இஸ்ரேல்..! ஈரான் உடன் பேச்சுவார்த்தை 'ஃபுல் ஸ்டாப்'! ஜேடி வான்ஸ் ஜெனிவா பயணம் ரத்து!

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவும் ஈரானும் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கான முதல் சுற்று, சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு உள்ளது, உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா - ஈரான் மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே முதலீட்டு சந்தையில் இது ரீசர்ட் மோட் என அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கிரவுட் ஜீரோ லெவல்-க்கு வந்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக திட்டமிடப்பட்டிருந்த சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ளார். இதற்கு காரணம் இஸ்ரேல் லெபானான் மீது தாக்குதல் நடத்துவதை சுட்டிக்காட்டி ஈரான் 60 நாள் முழு பேச்சுவார்த்தை காலத்தையும் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து ஜேடி வான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Iran war trump Israel JD Vance Iran talks cancelled US Iran nuclear negotiations Israel Lebanon attacks US Iran MOU violation Iran Geneva talks suspended Hormuz blockade threat Trump Vance Netanyahu criticism Strait of Hormuz tension US Iran talks collapse Israel violates ceasefire 2026 2026

ஈரான் பேச்சுவார்த்தையை நிறுத்தியது

ஈரான், அமெரிக்காவுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) முதல் விதியை இஸ்ரேல் மீறியதாகக் கூறி, முழு 60 நாள் பேச்சுவார்த்தை காலத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேல், தென் லெபனானில் இருந்து பின்வாங்காமல் தாக்குதல்களைத் தொடர்ந்ததே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்தான 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்தது. இது, ஒப்பந்தத்தின் முதல் விதியை மீறுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானின் பேச்சுவார்த்தை குழு பயணம் ரத்து

ஈரானின் பேச்சுவார்த்தை குழு, சுவிட்சர்லாந்துக்கு புறப்படுவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், முழு பயணமும் ரத்து செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடைபெறவிருந்த முதல் சுற்று தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு, அமெரிக்கா ஒப்பந்தத்தின் முதல் விதியை நடைமுறையில் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வரை பேச்சுவார்த்தைகள் தொடராது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து டிரம்ப், ஜேடி வான்ஸ் ஆகியரோர் இஸ்ரேல் அரசையும், அந்நாட்டு அதிபரான பென்ஞசமின் நெதன்யாகு-வையும் கடுமையாக விமர்சனம் செய்தும், போர் தாக்குதல் நிறுத்துமாறும் உத்தரவிட்டு உள்ளனர். ஈரான் போரில் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து செயல்பட்ட நிலையில் தற்போது லெபனான் மீது தாக்குதல் இஸ்ரேல் தாக்கும் போது தன்னிச்சையாக செயல்படுவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் ஈரான் இதை ஏற்க மறுக்கப்படுகிறது.

இந்த விஷயங்கள் அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் எவ்வளவு உறுதியற்ற நிலையில் உள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை எப்படி மாறுகிறது என்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+