சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் டி.கே.சிவகுமார் தலைமையிலான கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்த வித அனுமதியுன் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை தீர்மானத்தில் ஏற்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது
Jun 19, 2026, 2:57 pm IST
பதில் அளிக்காத முதல்வர்
சட்டம் ஒழுங்கு குறித்து, திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்விக்கு, துறை சார்ந்த அமைச்சராக முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்திருக்கிறார்
Jun 19, 2026, 1:51 pm IST
தவெக-திமுக இடையே வாக்குவாதம்
முக்கிய பிரச்சனை குறித்து முதலமைச்சர் பேசவில்லை, பாலியல் குற்றங்கள் குறித்து பதில் சொல்லாத முதலமைச்சர் என்று திமுக எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சருக்கு எப்போது பேச வேண்டும் என்று தெரியும் என பதிலளித்துள்ளார்.
Jun 19, 2026, 1:19 pm IST
ஐயுஎம்எல் ஆதரவு
மேகதாது அணைக்கு எதிரான முதலமைச்சரின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அமைச்சர் ஷாஜகான்
Jun 19, 2026, 1:18 pm IST
ஆளுநர் உரை ஏமாற்றம்
சிறுபான்மையினரின் நலன் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு. 3.5% இடஒதுக்கீட்டில் பலனடைந்த இஸ்லாமியர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், பக்ரீத்துக்கு விலங்குகள் பலியிடக்கூடாது என்கிற உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், எதிர்க்காலத்தில் கோயில்களில் விலங்குகளை பலியிடவும் தடை வந்துவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
Jun 19, 2026, 1:06 pm IST
பதில் அளிக்காத அமைச்சர்கள்
தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல, முழு பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளனர்.
Jun 19, 2026, 12:37 pm IST
லைவ் நிறுத்தியது ஏன்?
ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், லைவ் நிறுத்தப்பட்டது ஏன்? என்று அதிமுக கேள்வி. முழு நேரலை என்பது உருட்டா? எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் ஐடியா இல்லையா சார்? என்று அதிமுக ஐடி விங் கேள்வி
Jun 19, 2026, 12:24 pm IST
வெள்ளை அறிக்கை
சட்டமன்றத்தில்தான் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுதான் மரபு. - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Jun 19, 2026, 12:08 pm IST
அட்லி படம் போல ஆளுநர் உரை
அட்லி படம் போல, வெட்டி ஒட்டி ஆளுநரின் உரை இருந்தது என்று திமுக எம்எல்ஏ சிவசங்கர் விமர்சனம். அட்லிக்கும் சட்டமன்றத்திற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி
Jun 19, 2026, 11:39 am IST
ஆளுநருடன் இணக்கம்
தேசிய கீதம், ஒருமுறைக்கு 2 முறை பாடப்பட்டது குறித்து சர்ச்சையை கிளப்ப வேண்டாம். ஆளுநருடன் எந்த மாநில அரசும், இணக்கமாக போக வேண்டும் என்றுதான் விரும்பும் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Jun 19, 2026, 11:38 am IST
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தேசிய கீதம் குறித்து, திமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “திராவிட கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. தற்போதைய திமுக தலைவர்களைதான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்களும் மாநில உரிமையில் உறுதியாக இருக்கிறோம்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
Jun 19, 2026, 11:36 am IST
மாநில உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதம்தான் தமிழ்நாட்டின் நடைமுறை என சிவசங்கர் பேச்சு
Jun 19, 2026, 11:35 am IST
தேசிய கீதம்
மரபுகளுக்கு மாறாக, தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் சுட்டிக்காட்ட, ஆளுநர் உரை குறித்து மட்டும் பேச வேண்டும் என சபாநாயகர் பதில்
Jun 19, 2026, 11:24 am IST
தீர்மானத்தின் மீது பேசாத கட்சிகள்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது, பாஜக, அமமுக, முஸ்லிம் லீக் சார்பில் உறுப்பினர்கள் பேசவில்லை
Jun 19, 2026, 11:22 am IST
ஜூலை 23ல் போராட்டம்
மேகதாது அணைக்கு எதிராக, ஜூலை 23ம் தேதி டெல்லியில், நாடாளுமன்றம் மற்றும் நீர்வள ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
Jun 19, 2026, 11:09 am IST
உதயநிதியின் கோரிக்கை
‘மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை, மேகதாது தனித் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்
Jun 19, 2026, 11:06 am IST
லைவ் நிறுத்தம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. சட்டமன்ற நேரலை தடையின்றி தொடரும் என்று அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கூறியிருந்த நிலையில், தற்போது நேரலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
Jun 19, 2026, 11:01 am IST
தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாது அணை குறித்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
Jun 19, 2026, 10:59 am IST
திமுக ஆதரவு
மேகதாது அணைக்கு எதிராக திமுக மேற்கொண்ட நடவடிக்கைகளை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டு, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Jun 19, 2026, 10:50 am IST
காங்கிரஸ் மீது அட்டாக்
மேகதாது அணை விவகாரத்தில், எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சி, கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் திமுக அதை கடுமையாக எதிர்த்தது. - உதயநிதி ஸ்டாலின்
Jun 19, 2026, 10:48 am IST
எடப்பாடி பழனிசாமி ஆதரவு
மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீரமானத்தை, அதிமுக ஒருமனதாக ஆதரிக்கிறது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Jun 19, 2026, 10:46 am IST
பட்டியல் போடும் எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணைக்கு எதிராக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் பட்டியலிட்டு வருகிறார்.
10:46 AM, 19 Jun

10:48 AM, 19 Jun
எடப்பாடி பழனிசாமி ஆதரவு
மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீரமானத்தை, அதிமுக ஒருமனதாக ஆதரிக்கிறது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
10:50 AM, 19 Jun
காங்கிரஸ் மீது அட்டாக்
மேகதாது அணை விவகாரத்தில், எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சி, கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் திமுக அதை கடுமையாக எதிர்த்தது. - உதயநிதி ஸ்டாலின்
10:59 AM, 19 Jun
திமுக ஆதரவு
மேகதாது அணைக்கு எதிராக திமுக மேற்கொண்ட நடவடிக்கைகளை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டு, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
11:01 AM, 19 Jun
தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாது அணை குறித்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
11:06 AM, 19 Jun
லைவ் நிறுத்தம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. சட்டமன்ற நேரலை தடையின்றி தொடரும் என்று அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கூறியிருந்த நிலையில், தற்போது நேரலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
11:09 AM, 19 Jun
உதயநிதியின் கோரிக்கை
‘மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை, மேகதாது தனித் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்
11:22 AM, 19 Jun
ஜூலை 23ல் போராட்டம்
மேகதாது அணைக்கு எதிராக, ஜூலை 23ம் தேதி டெல்லியில், நாடாளுமன்றம் மற்றும் நீர்வள ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
11:24 AM, 19 Jun
தீர்மானத்தின் மீது பேசாத கட்சிகள்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது, பாஜக, அமமுக, முஸ்லிம் லீக் சார்பில் உறுப்பினர்கள் பேசவில்லை
11:35 AM, 19 Jun
தேசிய கீதம்
மரபுகளுக்கு மாறாக, தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் சுட்டிக்காட்ட, ஆளுநர் உரை குறித்து மட்டும் பேச வேண்டும் என சபாநாயகர் பதில்
11:36 AM, 19 Jun
மாநில உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதம்தான் தமிழ்நாட்டின் நடைமுறை என சிவசங்கர் பேச்சு
11:38 AM, 19 Jun
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தேசிய கீதம் குறித்து, திமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “திராவிட கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. தற்போதைய திமுக தலைவர்களைதான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்களும் மாநில உரிமையில் உறுதியாக இருக்கிறோம்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
11:39 AM, 19 Jun
ஆளுநருடன் இணக்கம்
தேசிய கீதம், ஒருமுறைக்கு 2 முறை பாடப்பட்டது குறித்து சர்ச்சையை கிளப்ப வேண்டாம். ஆளுநருடன் எந்த மாநில அரசும், இணக்கமாக போக வேண்டும் என்றுதான் விரும்பும் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
12:08 PM, 19 Jun
அட்லி படம் போல ஆளுநர் உரை
அட்லி படம் போல, வெட்டி ஒட்டி ஆளுநரின் உரை இருந்தது என்று திமுக எம்எல்ஏ சிவசங்கர் விமர்சனம். அட்லிக்கும் சட்டமன்றத்திற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி
12:24 PM, 19 Jun
வெள்ளை அறிக்கை
சட்டமன்றத்தில்தான் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுதான் மரபு. - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
12:37 PM, 19 Jun
லைவ் நிறுத்தியது ஏன்?
ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், லைவ் நிறுத்தப்பட்டது ஏன்? என்று அதிமுக கேள்வி. முழு நேரலை என்பது உருட்டா? எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் ஐடியா இல்லையா சார்? என்று அதிமுக ஐடி விங் கேள்வி
1:06 PM, 19 Jun
பதில் அளிக்காத அமைச்சர்கள்
தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல, முழு பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளனர்.
1:18 PM, 19 Jun
ஆளுநர் உரை ஏமாற்றம்
சிறுபான்மையினரின் நலன் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு. 3.5% இடஒதுக்கீட்டில் பலனடைந்த இஸ்லாமியர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், பக்ரீத்துக்கு விலங்குகள் பலியிடக்கூடாது என்கிற உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், எதிர்க்காலத்தில் கோயில்களில் விலங்குகளை பலியிடவும் தடை வந்துவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
1:19 PM, 19 Jun
ஐயுஎம்எல் ஆதரவு
மேகதாது அணைக்கு எதிரான முதலமைச்சரின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அமைச்சர் ஷாஜகான்
1:51 PM, 19 Jun
தவெக-திமுக இடையே வாக்குவாதம்
முக்கிய பிரச்சனை குறித்து முதலமைச்சர் பேசவில்லை, பாலியல் குற்றங்கள் குறித்து பதில் சொல்லாத முதலமைச்சர் என்று திமுக எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சருக்கு எப்போது பேச வேண்டும் என்று தெரியும் என பதிலளித்துள்ளார்.
2:57 PM, 19 Jun
பதில் அளிக்காத முதல்வர்
சட்டம் ஒழுங்கு குறித்து, திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்விக்கு, துறை சார்ந்த அமைச்சராக முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்திருக்கிறார்
A resolution was moved in the Legislative Assembly today opposing the Karnataka government's move—led by D.K. Shivakumar—to construct a dam across the Cauvery River and urging the Union Government not to grant any permission for the project. Leaders of all political parties, including the Tamil Nadu Congress Committee, have extended their support to this resolution.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.