இன்வெர்ட்டர் ஏசி vs நார்மல் ஏசி.. எந்த மாதிரி ஏசி உங்கள் வீட்டு அறைக்கு சிறந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயில் கொளுத்துவதால் பலரும் ஏசி வாங்க விரும்புகிறார்கள். குறைந்த மின் கட்டணமே ஆகும் இன்வெர்ட்டர் ஏசிக்களையே பலரும் விரும்புகிறார்கள். அதேநேரம் உங்கள் வீட்டு அறைக்கு எந்த மாதிரி ஏசி சிறந்த கூலிங் தரும் என்பதை பார்த்து வாங்குகள்.

அதிகாலை நேரம், ஐந்து மணிக்கு கூட சென்னையில் குளிராது. புழுக்கமாகவே இருக்கும். காலை 6 மணிக்கே சூரியன், பல நாட்கள் விளக்காத பல்லை திடீரென விளக்கியது போல், பளிச் சென்று முன்னே வருகிறது. இரவு 7மணிக்கு கூட போக மறுக்கும் சூரியனை, மேகங்கள் கூட கட்டாயப்படுத்தி மறைக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படியான இந்த வெயிலில் மக்கள் புழுங்குகிறார்கள்.

Inverter AC vs Normal AC: Which type of AC will provide better cooling for your living room?

காற்றாடி இல்லாமல் கனநொடி கூட இருக்க முடியாது என்கிற அளவில் மின்சாரத்தை பயன்படுத்தி வாழ்கிறார்கள். கொடைக்கானல் மலை காடுகளே வெப்பத்தை குறைக்க புகைதள்ளும் நிலையில், சூரியனுக்கு பக்கத்தில் குடியிருக்கும் சென்னை மக்களோ கான்கிரீட் காட்டில் வாழுகிறார்கள். அவர்களின் நிலையை யோசித்து பாருங்கள். உண்மையில் கஷ்டம் தான்.

சென்னை போன்ற கான்கிரீட் காடுகளில் ஏசிக்கள் வெப்பத்தை குறைக்கும் முக்கியமான கருவியாக உள்ளது. ஏசிக்களை அதிகமான மக்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் பலர் ஏசி வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி வாங்க விரும்பும் மக்கள், எந்த ஏசி குறைந்த மின் கட்டணம் வரும் என்று பார்க்கிறார்கள். அதேநேரம் எந்த ஏசி அவர்களின் வீடுகளுக்கு சிறந்ததா என்று பார்க்க மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்காக சில டிப்ஸ்கள் உள்ளன. அவற்றை பாருங்கள்.

குறைந்த மின் கட்டணத்தை விரும்பும் மக்கள் இன்வெர்ட்டர் ஏ.சியை தான் வாங்குகிறார்கள். இன்வெர்ட்டர் ஏசி என்றால் என்ன? கம்ப்ரெசர் மோட்டார்களைக் கட்டுப்படுத்தும் புது டெக்னாலஜி இன்வெர்ட்டர் ஏ.சி.களில் பயன்படுத்தப்படுகிறது. அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல், அறையைக் குளிரச் செய்யும் என்பதுதான் இன்வெர்ட்டர் ஏசியின் பணியாகும். நமக்கு வேண்டிய வெப்பநிலைக்கு ஏற்றவாறு மோட்டாரின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் இன்வெர்ட்டர் உதவும். இன்வெர்ட்டர் ஏசிகள் கம்ப்ரஸரின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பணியை ஆட்டோமெட்டிக்காகவே மேற்கொள்ளும். உதாரணமாக, நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்துள்ளீர்கள் என்றால் , அறை வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் முதல் 1.5 டன் வரையில் அது சூழலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்ளும். அதற்கேற்றபடி, இவை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்தும். இதற்காக உள்ளே வரும் Alterante current-ஐ DC ஆக மாற்றும். மின்மோட்டாரின் வேகத்தையும் கட்டுப்படுத்தும். இதுதான் இன்வெர்ட்டர் ஏசியின் முக்கியமான பணி. இதன் காரணமாகவே இன்வெர்ட்டர் ஏசிக்கள் மின்சார சிக்கன ஏசிக்களாகப் பார்க்கப்படுகின்றன.

சாதாரண ஏசிகள் என்றால் எப்போதும் ஒரே திறனில் செயல்படும்? இந்த வகை ஏசிக்களால், கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்த முடியாது. அறை வெப்பநிலை குறிப்பிட்ட டிகிரியை எட்டியவுடன், கம்ப்ரஸர் தானாகவே ஆஃப் ஆகிவிடும். இந்த ஆன் - ஆஃப் புராசஸின்போது அதிக சத்தமும் வரும். இன்வெர்ட்டர் ஏசி இப்படி இருக்காது.

இன்வெர்ட்டர் ஏசி, நார்மல் ஏசி, எது உங்கள் வீட்டிற்கு பெஸ்ட் என்பதை இப்போது பார்ப்போம்? : பொதுவாக நாம் எந்த ஒரு மின்சாதன பொருளை வாங்குவதாக இருந்தாலும் மின் கட்டணம் குறைவாக இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்குவோம். அந்தவகையில் பார்த்தால் நார்மல் ஏசியை விட மின் சிக்கனம் என்ற அடிப்படையில் இன்வெர்ட்டர் ஏசிதான் சிறந்தது. இது உங்களது மின் கட்டண பில் தொகையைக் குறைக்கும். அதேநேரம், இன்வெர்ட்டர் ஏசிகளுக்கான பராமரிப்பு, ரிப்பேர் மற்றும் அதன் பாகங்களின் விலை ஆகியவை சாதாரண ஏசிக்களை விட மிக அதிகமாகும்.

சரி உங்கள் வீட்டுக்கு சாதாரண ஏசி நல்லதா, இன்வெர்ட்டர் ஏசி நல்லதா என்பதை எப்படி முடிவு செய்வது? நீங்கள் எந்த ஏசியை வாங்க வேண்டும் என்பது உங்களின் வீட்டு அறையை பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, 120 சதுர அடி பரப்பளவு கொண்ட உங்களின் பெட்ரூமுக்கு ஏசி வாங்குகிறீர்கள் என்றால், அந்த அறையில் 3 மணி நேரத்துக்கு மேல் வெயில் படாது என்கிற சூழலில் இன்வெர்ட்டர் ஏசியை விட சாதாரண ஏசிதான் பெஸ்ட் ஆக இருக்கும். அதேபோல், ஹால் அல்லது பெரிய அறைகள் போன்ற இடங்களில் இன்வெர்ட்டர் ஏசிதான் சரியாக இருக்கும். இந்த வகையான அறைகளில் சூரிய வெளிச்சம் அதிகம் படும் என்பதாலும், இடமும் கொஞ்சம் பெரிது என்பதால், மின்சார சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்துவது நல்லது.

இன்னொரு முக்கியமான விஷயம் இன்வெர்ட்டர் ஏ.சி ஆரம்ப விலை அதிகமாக இருந்தாலும் மின்சார சிக்கனம், நீண்ட நாட்கள் உழைக்கும். மேலும் இன்வெர்ட்டர் ஏ.சி, சாதாரண ஏ.சி.யைவிட அதிக நாட்கள் உழைக்கும். எனவே எது வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் மின்சாரம் மிச்சப்படுத்தும் ஸ்டார் ரேட்டிங், இன்ஸ்டலேஷன், சர்வீஸ்க்கு எவ்வளவு கட்டணம் உள்ளிட்டவற்றை நன்றாக அறிந்து கொண்டு வாங்குங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+