முதலீடுகள் தமிழ்நாட்டில் கொட்டுகிறதா? டிரெண்ட் மாறுது.. கட்சி நிதி குறித்து அமைச்சர் அருண்ராஜ் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கட்சி நிதி" என்ற பெயரில் முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களை முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கடுமையாக சாடி பேசியதை தொடர்ந்து, அது தொடர்பான முழு விவரங்களையும் சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஆட்சியில் பெறப்பட்ட லஞ்சக் கட்சி நிதியால்தான் பல பன்னாட்டு முதலீடுகள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்றதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை தந்து வருகிறது.

முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசும்போது, "நிர்வாகத் திறமை என்பது ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் என்றால், எங்கள் அரசு அதுபோன்ற ஊழல் நிறைந்த நிர்வாகப் பழக்கங்களில் எப்போதும் ஈடுபடாது. முந்தைய ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் மூலம் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்ட பணம், இப்போது மீண்டும் அரசு கருவூலத்திற்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது.

Investments

கட்சி நிதி என்று ஆரம்பித்த விஜய்

நான் 'கட்சி நிதி' என்று சொன்னதும் அவர்கள் எப்படி ஓடினார்கள் என்பதைப் பாருங்கள். நான் எந்தக் குறிப்பிட்ட கட்சியின் பெயரையோ அல்லது நபரின் பெயரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. தவறான மனசாட்சி உள்ளவர்கள்தான் ஓடிப் போகிறார்கள். கட்சி நிதி என்ற பெயரில் இரு தரப்பிலும் நடத்தப்பட்ட இந்தச் சூறையாடல்களும், லஞ்ச வசூல்களும் இனி முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்! என்றெல்லாம் காட்டமாக பேசியிருந்தார்.

இதற்கு பிறகு, "கட்சி நிதி" என்று அன்று தான் பேசிய விவகாரத்தை, பெரிய அளவில் கொண்டு செல்ல விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன..

அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு?

அதனால்தான், கடந்த ஆட்சி காலத்தில் அரசு துறைகளில் கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான தகவல்களை சேகரிக்க தன்னுடைய செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன்படியே தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோட்டை வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் அருண்ராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் பேசும்போது, "கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலித்ததால் முதலீடுகள் வராமல் இருந்தது; இப்போது நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் நடப்பதால் முதலீடுகள் தானாக வருகிறது..

முதலீடுகள் தமிழகத்துக்கு குவிகிறதா?

பல பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தவிர்த்த காரணத்தை, தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்... எது நடந்தாலும் கட்சி நிதி தான்... கட்சி நிதி காரணமாக தான் முதலீடுகள் பக்கத்து மாநிலங்களுக்கு போனது.கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலித்ததால் முதலீடுகள் வராமல் இருந்தது.

ஆனால் இப்போது இந்த 2 மாத ஆட்சியில் நீங்களே பார்த்திருப்பீர்கள்.. நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதால், முதலீடுகள் தானாக வருகிறது, டிரெண்ட் மாறப்போகுது... கண்டிப்பாக தமிழகம் தலைசிறந்த ஒரு முதலீடுகள் பெறும் மாநிலமாக உருவாகும். நர்ஸ்களை நலனுக்கு என்ன செய்யலாம் என்றெல்லாம் முதல்வர் விஜய் கேட்டறிந்துள்ளார்.. அதனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று அமைச்சர் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியின் கட்சி நிதி ஊழல்கள் குறித்து அதிகாரிகள் மூலம் தீவிர விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இப்போது வெளிப்படையான நிர்வாகத்தால் தமிழகத்திற்குப் பன்னாட்டு முதலீடுகள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருப்பது கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+