வெளிநாட்டில் ஐபோன் 17 வாங்கினால் லாபமா? இந்த டெக்னிக்கை மட்டும் யூஸ் பண்ணுங்க! 10 ஆயிரம் மிச்சமாகும்
சென்னை: உலகம் முழுவதும் பயனர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆப்பிள் நிறுவனம் தனது iphone 17 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் iPhone 17 - 256 GB மாடலின் ஆரம்ப விலை 799 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 71 ஆயிரம் என்ற நிலையில் அதே மாடல் இந்தியாவில் 82,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் சில நாடுகளில் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை விலை குறைவாக iphone 17 சீரிஸ் மாடல்களை வாங்கலாம் என பார்க்கலாம்.. அதே நேரத்தில் 'இந்த' டெக்னிக்கை மட்டும் கடைபிடித்தால் நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், ஐபோனை குறைந்த விலைக்கு வாங்கலாம்..
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 17 சீரிஸ் சமீபத்தில் உலகளவில் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிள் ஈவெண்டில் iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் iPhone Air என நான்கு மாடல்கள் வெளிவந்துள்ளன.
புதிய சிப், அட்டகாசமான கேமரா மற்றும் மெல்லிய வடிவமைப்பு ஆகியவை இந்த முறை ஐபோன் 17 சீரிஸின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. ஐபோன் 17 சீரிஸீன் ஆரம்ப விலை ₹82,900 என்று இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 17
ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் விலையை ஒப்பிட்டு பார்த்தால், சில நாடுகளில் இது இந்தியாவைவிட கணிசமாக குறைவாக கிடைக்கிறது. இதனால் இந்தியர்கள் வெளிநாடு சென்று iPhone வாங்கினால் உண்மையில் லாபமா என்று கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் iPhone 17 (256GB மாடல்) 799 அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில், சுமார் 71,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய விலையுடன் ஒப்பிடும் போது குறைந்தபட்சம் 10,000 ஆயிரம் ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விலை
இந்தியாவில் வரி உள்ளிட்டவை காரணமாக சுமார் 10,000 விலை அதிகமாக இருக்கும் நிலையில் கனடா, ஹாங்காங், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் இதன் விலை மலிவானதாக இருக்கிறது. ஜப்பானில் ஐபோன் 17 மாடலின் விலை 72 ஆயிரம் ரூபாய் முதல் 74 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஜெர்மனியில் ஐபோன் 17 விலை 98 ஆயிரம் ஆகும். இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாகவும் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆப்பிள் ஐபோன் 17
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐபோன் 17 பேசிக் மாடல் வாங்கினால் நேரடியாக விலை குறைவு கிடைக்கும் எனவும் இதனால் பல ஆயிரம் ரூபாய்களை சேமிக்கலாம் என சொல்கின்றனர். உண்மையில் துபாய் போன்ற வரி இல்லா நாடுகளில் ஐபோன்களின் விலை மிகவும் குறைவுதான். ஆனால் அதற்கும் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும். உதாரணமாக அமெரிக்கா அல்லது ஜப்பான் செல்லும்போது இந்தியாவை விட ஐபோன் 17 மாடல்களை விலை குறைவாக வாங்கலாம். ஆனால் விமான பயண கட்டணம், தங்குமிடம் உணவு உள்ளிட்ட செலவுகளை கவனிக்க வேண்டும்.
விலை குறைவு
மேலும் இந்தியா திரும்பி வரும்போது கஷ்டம் டூட்டி, ஜிஎஸ்டி சேர்த்து 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து ஐபோன்களுக்கு வாரன்டி கிடைக்குமா? உரிய சர்வீஸ் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான். சில ஐபோன் மாடல்களில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப சிம் ஸ்லாட் அமைக்கப்பட்டு இருக்கும். சில நாடுகளில் இ-சிம் மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் இந்தியாவில் சிம் கார்டுகளை மட்டும் உபயோகிப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
ஐபோன் பிரச்சனை
உலகளவில் iPhone 17 விலை அமெரிக்கா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் இந்தியாவை விட மலிவாகவே இருக்கிறது. ஆனாலும் விமானக் கட்டணம், தங்கும் செலவு, வரி, வரண்டி ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் பெரும்பாலும் இந்தியர்களுக்கு பெரிய லாபமில்லை. ஆனால், ஏற்கனவே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டவர்கள், அல்லது அங்கு தங்கியிருப்பவர்கள் மூலம் ஐபோன் வாங்குவது லாபமாக இருக்கும். ஆனால் iPhone வாங்குவதற்காகவே விமான டிக்கெட் புக்கிங் செய்து செல்வது நிச்சயம் நஷ்டமே ஆகும்.












Click it and Unblock the Notifications