நாளை வெளியாகும் ஐபோன் 17.. விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு! ஆப்பிள் ரசிகர்கள் சோகம்
சென்னை: ஆப்பிள் நிறுவனம் நாளைய தினம் தனது புதிய ஐபோன் மாடல்களை வெளியிட உள்ளன. நாளை ஐபோன் 17 சீரியஸில் மொத்தம் நான்கு மாடல்கள் வெளியான உள்ளன. ஐபோன் விலை ஏற்கனவே வானத்தை எட்டும் அளவுக்கு இருக்கும் சூழலில், ஐபோன் 17 சீரியஸில் சில மாடல்கள் விலை மேலும் உயர வாய்ப்புகளாகச் சொல்லப்படுகிறது.
என்ன தான் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிறுவனங்களும் வெவ்வேறு மாடல் செல்போன்கள் வெளியிட்டாலும் கூட எப்போதும் ஐபோன்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். ஆண்டுக்கு ஒரு ஐபோன் சீரியஸை மட்டுமே வெளியிட்டாலும் கூட அதற்குத் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் வெளியாகும் நேரத்தில் அதற்கான ரசிகர்களை நீங்களே பார்க்கலாம்.

ஐபோன் 17
இதற்கிடையே ஐபோன் நிறுவனம் தனது அடுத்த மாடலான ஐபோன் 17 சீரியஸை நாளை வெளியிடவுள்ளது. ஐபோனின் புதிய மாடலில் இடம் பெறும் சில முக்கிய அம்சங்கள் குறித்து இப்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த ஆண்டு பல நாடுகளில் ஐபோன்களில் சிம் கார்டுகளுக்கு தனி இடம் இருக்காதாம். கடந்தாண்டே அமெரிக்காவில் ஐபோன் மாடல்களுக்கு இ- சிம் வசதி மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு வேறு சில நாடுகளிலும் சிம் ஸ்லாட்டை தூக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
விலை உயரும்
வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தாண்டு அமெரிக்கா, இந்தியா உட்பட உலகெங்கும் ஐபோன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ மாடல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோவின் ஆரம்ப விலை சுமார் ₹1,24,900 ஆக இருக்கலாம்.. இது ஐபோன் 16 ப்ரோவின் ஆரம்ப விலையை விட சுமார் ₹5,000 அதிகமாகும். இந்த விலை உயர்வை நியாயப்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ப்ரோ மாடலின் ஸ்டோரேஜ்ஜை 256GBஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ஐபோன் 17ன் வழக்கமான மாடல் விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ரூ.79,990ஆக தொடரும் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 மாடல்களும் இதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டும் விலையில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
எப்போது கிடைக்கும்?
இந்தாண்டு ஐபோன் 17 ப்ரோ கருப்பு, வெள்ளை, சாம்பல், அடர் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும். அதேசமயம் வழக்கமான ஐபோன் 17 கருப்பு, வெள்ளை, பியூட்டர் சாம்பல், பச்சை, பிங்க் மற்றும் வெளிர் நீல நிறங்களில் வழங்கப்படும்.
இன்று ஐபோன் வெளியிடப்படும் நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி இதற்கான முன்பதிவுகள் தொடங்கும்.. செப்டம்பர் 19ஆம் தேதி இவை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் iOS 26 உடன் வரும். பழைய ஐபோன் மாடல்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி, இந்த iOS 26 அப்டேட் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
முக்கிய தகவல்கள்
ஐபோன் 17இன் டிஸ்பிளே ஐபோன் 16ஐ விட பெரியதாக இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது ஐபோன் 16 டிஸ்பிளே ஆனது 6.1 இன்ச் ஆக இருந்த நிலையில், ஐபோன் 17ல் அது 6.3-இன்ச் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், refresh rate கூட எல்லா மாடல்களுக்கும் 120Hzஆக அதிகரிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், Always-On Display மற்றும் அடாப்டிவ் refresh rate போன்ற ப்ரோ மாடல் அம்சங்கள் வழக்கமான ஐபோன் மாடலில் இருக்காது.
ஐபோன் 17 ப்ரோ மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் ஐபோன் 17 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், முன்புறம் 24 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது?
இந்தாண்டு ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 air, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் நான்கு மாடல்களை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஐபோன் மாடல்கள் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications