"இன்ப சுற்றுலா.." பாங்காங் போய் ஐபோன் வாங்கினால்.. டிக்கெட், ஹோட்டல் செலவுக்கு பிறகும் நமக்கு லாபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியர்கள் பணத்தை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதேநேரத்தில் புதிய புதிய விஷயங்களை ட்ரை செய்ய வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். இப்போது ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட்டுள்ள நிலையில், அதன் விலை இந்தியாவில் ரூ.3 லட்சமாக இருக்கிறது. இதை விட குறைந்த விலைக்கு ஐபோன் Duoஐ எப்படி வாங்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்

ஆப்பிள் நிறுவனம் நேற்றிரவு தனது புதிய ஐபோன் சீரியஸை வெளியிட்டது. ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் என இரு மாடல்கள் வெளியானது. அத்தோடு சேர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனும் வெளியிடப்பட்டது. இந்த ஐபோனுக்கு ஐபோன் Duo என பெயரிடப்பட்டுள்ளது.

iPhone Duo Price in India vs Thailand Apple iphone

ஐபோன் Duo

இந்த ஐபோன் Duo மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தாலும் அதன் விலையை கேட்டால் தலையே சுற்றுகிறது. ஆப்பிள் ஐபோன் விலை கிட்டத்தட்ட ரூ.3 லட்சமாக இருக்கிறது. இதற்கிடையே அதை சற்றே குறைந்த விலையில் வாங்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஐபோனை குறைந்த விலைக்கு வாங்குவதில் பெஸ்ட் வழி என்றால் அது அமெரிக்காவில் வசிக்கும் உறவினர் மூலம் வாங்குவது தான். அதாவது அமெரிக்காவில் உங்களுக்கு தெரிந்த உறவினர் இருந்தால் அவர்கள் உங்களுக்காக ஐபோனை வாங்கி வரலாம்.

ஆனால், அமெரிக்காவில் உறவினர் இல்லாதவர்களுக்கு மற்றொரு வழியும் இருக்கிறது. அதாவது ஐபோன் Duo வாங்குவதற்காக பாங்காக் சென்று வந்தால் உங்களுக்கு லாபமா நஷ்டமா என்பது குறித்து பார்க்கலாம். எப்போதுமே இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஐபோன்களின் விலை, தாய்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக இருக்கும். ஐபோன் Duoவை பொறுத்தவரை இந்த விலை வித்தியாசம் சுமார் ரூ.70,000 வரை இருப்பதாக கூறப்படுகிறது.

விலை

இந்தியாவில் ஐபோன் Duoவின் ஆரம்ப விலை ரூ.2,99,900. ஆனால் தாய்லாந்தில் இதன் விலை 78,999 தாய் பாட். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.2.30 லட்சம். இதனால், நேரடியாக ஒப்பிட்டால் ரூ.70,000 வரை மிச்சமாகும். நாம் தாய்லாந்து சென்று ஐபோனை வாங்கிவிட்டு வர விமான டிக்கெட், ஹோட்டல், உணவு உள்ளிட்ட செலவுகளும் இருக்கும். அதை சேர்த்து கணக்கிட்டால் கூட நமக்கு லாபம்தான்.

ஐபோன் Duo அக்டோபர் 23ம் தேதி விற்பனைக்கு வருகிறது. முதல் நாளே வாங்க வேண்டும் என வைத்து கொண்டால், அக்டோபர் 23-ம் தேதி பாங்காக் சென்று, அக்டோபர் 25ம் தேதி இந்தியா திரும்புவதாக கணக்கு எடுத்துக்கொள்ளலாம். சென்னையில் இருந்து பாங்காக் சென்று வர விமான டிக்கெட் சுமார் ரூ.27,000இல் இருந்தே தொடங்குகிறது.

தாய்லாந்து டிரிப்

அடுத்து இரண்டு இரவுகள் தங்குவதற்கான ஹோட்டல் செலவை பார்க்க வேண்டும். பாங்காக்கில் நல்ல 3 அல்லது 4 நட்சத்திர ஹோட்டலில் ஒரு இரவுக்கு சுமார் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை செலவாகலாம். இரண்டு நாட்களுக்கு சுமார் ரூ.10,000 என வைத்து கொண்டால் கூட இன்னும் நமக்கு ரூ.33,000 கையில் இருக்கும். இரண்டு நாட்களில் உணவு மற்றும் உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதற்காக சுமார் ரூ.15,000 செலவாகும் என வைத்துக்கொண்டால், அனைத்து செலவுகளையும் கழித்த பிறகும் சுமார் ரூ.18,000 மிச்சமாகும்.

அதாவது ஐபோன் Duo வாங்குவதுடன், இரண்டு நாட்கள் தாய்லாந்தில் சிறிய டிரிப்பையும் முடித்துவிட்டு வரலாம். அப்படி வந்தாலும் கூட இந்தியாவில் வாங்குவதைவிட ரூ.18,000 வரை சேமிக்க முடியும்! இந்த கணக்கு 256GB அடிப்படை மாடலுக்கானது. அதிக விலை கொண்ட மாடல்களை வாங்கினால் சேமிப்பு மேலும் அதிகரிக்கலாம். 2TB மாடல் தாய்லாந்தில் 1,27,900 தாய் பாட், அதாவது சுமார் ரூ.3.69 லட்சமாகும். இந்தியாவில் இதன் விலை ரூ.4,49,900. அதாவது சுமார் ரூ.80 ஆயிரம் வித்தியாசம். எனவே உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும்.

விலை குறைவு

தாய்லாந்து மட்டுமல்ல, துபாய் மற்றும் ஹாங்காங் சென்று வாங்கினாலும் கூட ஐபோன் Duo-வை கணிசமாக குறையும். துபாயில் இதன் ஆரம்ப விலை 8,499 திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.20 லட்சமாக உள்ளது. ஹாங்காங்கில் 17,499 ஹாங்காங் டாலர், அதாவது சுமார் ரூ.2.12 லட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+