திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் இன்று ஒப்படைப்பு! சேகர்பாபு தகவல்
சென்னை: திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் அதன் உரிமையாளரிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் 6 மாதங்கள் கழித்து உண்டியல் திறக்கப்பட்டது. அதில்ரூ 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம் , 620 கிராம் வெள்ளி இருந்தது. இத்துடன் ஒரு ஐபோனும் இருந்தது. இது யாருடையது என கோயில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த போன், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தினேஷ் திருப்போரூர் கோயிலுக்கு வந்து தனது போனை பெற்றுக் கொள்ளலாம் என தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என கூறி போனை தர மறுத்துவிட்டனர்.
அந்த போனின் விலை ரூ 1.50 லட்சம் என்று சொல்லியும் செல்போனை திருப்பி கொடுக்க கோயில் நிர்வாகமோ மறுத்துவிட்டது. வேண்டுமானால் உங்கள் போனில் இருக்கும் தரவுகளை எடுத்துக் கொண்டு போனை கொடுங்கள் என்றனராம். இதையடுத்து அந்த போனில் இருந்த போட்டோக்கள், வீடியோக்கள், கான்டாக்ட்கள், முக்கிய மெசேஜ்களை தினேஷ் எடுத்துக் கொண்டதும், போனை மறக்காமல் கோயில் நிர்வாகம் கேட்டு வாங்கிக் கொண்டனராம். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அன்று புத்தாண்டுக்கான புதிய காலண்டரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ஐபோன் குறித்து மகிழ்ச்சிகரமான முடிவு வரும் ஜனவரி 2 அல்லது 3 தேதிகளில் எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சேகர்பாபு பேட்டி அளித்த போது உண்டியலில் விழுந்த ஐபோன் இன்று உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த போனின் உரிமையாளர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications