"மேட் இன் சென்னை".. ஐ போன் ஏற்றுமதியில் நம்பர் 1.. சீனாவை திக்கி திணற வைத்த தமிழ்நாடு!
சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்தான் தற்போது தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருள் ஆகும். ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் ஏற்றுமதியை முந்தி ஐபோன் ஏற்றுமதியில் சென்னை கலக்கி உள்ளது.
சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் கிளை, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் வகையை உற்பத்தி செய்தது. ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. 80% உற்பத்தி சென்னையில் நடந்தது. அதனால் இதை முழுமையாக மேட் இன் இந்தியா என்று சொல்ல முடியாது. இந்த நிலையில்தான் மொத்தமாக முழுக்க முழுக்க சென்னையிலேயே ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இது போக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் 12 மாடலை மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த போனில் இனி மேட் இன் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்தான் தற்போது தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருள் ஆகும். ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் ஏற்றுமதியை முந்தி ஐபோன் ஏற்றுமதியில் சென்னை கலக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
லைட் நாப்தா எண்ணெய் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் புதிய உயரத்தை தொட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. இது போக மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கியா நிறுவனம் முதலீடு செய்யாமல் ஒதுங்கியது. கியா முதலீட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எவ்வளவோ முயன்றது. ஆனால் அப்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் குவியவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரிதாக நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் அப்போது மிக முக்கியமான முதலீடான கியா முதலீட்டை தமிழ்நாடு இழந்தது. இது தமிழ்நாட்டிற்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஏனென்றால் அப்போது தமிழ்நாடு - தெலுங்கானா - கர்நாடகா இடையே மிகப்பெரிய முதலீட்டு யுத்தம் நடைபெற்றது.
அந்த யுத்தத்தில் தமிழ்நாடு அப்போது பின்னோக்கி சென்றது. அதிலும் கியா முதலீட்டை ஹைதராபாத் தட்டி தூக்கியது. ஆட்டோமொபைல் தலைமையிடமாக இருந்து கொண்டு தமிழ்நாடு கியா முதலீட்டை பெற முடியாதது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இப்போது அதே கியா குழுவில் உள்ள ஹூண்டாய் நிறுவன முதலீட்டை தமிழ்நாடு பெறுகிறது. கியா - ஹூண்டாய் எல்லாம் ஒரே குழுமம்தான். இரண்டுமே தென்கொரியாவை சேர்ந்த குழுமம்தான்.கியா தமிழ்நாடு வேண்டாம் என்று 4 வருடங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், அவர்களையே தற்போது தட்டி தூக்கி ஹூண்டாய் முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அப்போது இழந்த மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை தற்போது தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து கொண்டது.
கார் உற்பத்தி: தமிழ்நாடு தொடர்ந்து ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் நிலையில்தான் தற்போது இந்த முதலீடும் சென்னையில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதற்காக முதலீடு செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது ஆட்டோமொபைல் மட்டுமின்றி மின்னணு சாதன துறையிலும் தமிழ்நாடு அசத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications