கை ஏன் இப்படி இருக்கு.. இது பவுலிங்கா? சர்ச்சையை ஏற்படுத்திய அஸ்வின்.. விளாசிய க்ரிஸ் ஸ்ரீகாந்த்
சென்னை: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் அஸ்வின் பவுலிங் செய்த விதம் இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி மோசமான பேட்டிங் காரணமாக 20 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவரில் 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இதன் மூலம் கொல்கத்தா அணி பைனல்ஸ் சென்றுள்ளது. நேற்று டெல்லி அணியின் பவுலிங் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் மோசமாக அமைந்து இருந்தது.

இந்திய அணி
டெல்லி அணியின் மூத்த வீரர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் இந்த சீசனில் ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி வருகிறார். ஐபிஎல் சீசன் முதல் பாதியில் இவரின் ஆட்டம் நன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் அமீரகத்தில் நடந்த ஆட்டத்தில் மொத்தமாக ஒரு விக்கெட்தான் நேற்று வரை எடுத்து இருந்தார். நேற்றுதான் 2 விக்கெட் எடுத்து மொத்தமாக அமீரகத்தில் நடந்த பாதி ஆட்டங்களில் 3 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

டெஸ்ட்
அந்த அளவிற்கு அஸ்வினின் ஆட்டம் இந்த தொடரில் மோசமாக இருந்தது. அஸ்வின் சாதாரண ஆப் ஸ்பின் பவுலிங் செய்தாலே அதில் விக்கெட் விழும். ஆனால் ரன் கொடுக்க கூடாது என்ற அச்சத்தால் அஸ்வின் நிறைய வேரியேஷன்களை மைதானத்தில் காட்டுகிறார். மாற்றி மாற்றி பவுலிங் செய்கிறார். சமயங்களில் அவரின் பவுலிங் ஆக்சனும் மிக மிக மோசமாக அமைந்து உள்ளது.
Recommended Video

அஸ்வின்
நேற்று போட்டியிலும் அஸ்வினின் பவுலிங் ஆக்சன் மோசமாக இருந்தது. கையை ஒரு பக்கமாக இழுத்து மடக்கி வித்தியாசமாக போட்டார். இது தொடக்கத்தில் அஸ்வினுக்கு உதவவில்லை. அஸ்வின் ஓவரில் வரிசையாக ரன்கள் சென்றது. கடைசி ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்தாலும் அஸ்வினின் ஆக்சன், பவுலிங் இரண்டுமே மெச்சிக்கொள்ளும் வகையில் இல்லை.

ஓவர் த்ரோ
போதாதற்கு அஸ்வின் ஒரு ஓவர் த்ரோ, கேட்ச் விட்டு வேறு விமர்சனங்களை சந்தித்தார். கடைசி இரண்டு பாலில் 6 ரன்கள் தேவை என்ற நேரத்தில் இவரின் ஆக்சன் காரணமாகவே நேற்று சிக்ஸ் சென்றது. பழைய ஸ்டைலில் போட்டு இருந்தால் அஸ்வின் கொஞ்சம் சமாளித்து இருப்பார். இதை நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஆக்சன்
என்ன ஆக்சன் இது? இதுதான் பவுலிங்கா? ஏன் இப்படி பவுலிங்கை அஸ்வின் மாற்றி மாற்றி வீசுகிறார். அஸ்வின் சாதாரணமாக வீசினாலே விக்கெட் விழுமே. அஸ்வின் அதிகமாக சோதனை முயற்சிகளை செய்கிறார். அவர் உடனே பவுலிங் ஆக்சனை பழையபடி மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அஸ்வின் பவுலிங்
இந்த நிலையில் அஸ்வினின் பவுலிங்கை நேற்று க்ரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்தார். அஸ்வின் ஏன் இப்படி பவுலிங் செய்கிறார். அவருக்கு கை இழுத்துகிட்டது போன்று பவுலிங் செய்தார். அஸ்வின் கொஞ்சம் ரிலாக்ஸாக பவுலிங் செய்து இருக்க வேண்டும். ஆனால் அவர் டென்ஷனாக காணப்பட்டார். அவர் பவுலிங் இன்று சிறப்பாக இல்லை.

மூத்த வீரர்
அவர் மூத்த வீரர் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். மாறாக கை இழுத்துக்கொண்டது போல அவரின் பவுலிங் இருந்தது. பவுலிங்கில் கை இழுத்துக்கிட்டது என்று சொல்வார்கள். அப்படித்தான் அஸ்வின் பவுலிங் இருந்தது. அவர் ஆக்சனை சரி செய்ய வேண்டும். நிறைய வேரியஷன் காட்ட வேண்டும் என்று நினைத்து தவறு செய்கிறார் என்று க்ரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் மீண்டும் இதே விமர்சனத்தை அஸ்வின் பவுலிங் செய்த போது க்ரிஸ் ஸ்ரீகாந்த் வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications