ப்ளே ஆப் சுற்றுக்கு முன்பா இப்படி நடக்கணும்? சிஎஸ்கேவிற்கு எதிர்பாராத சிக்கல்.. தோனி என்ன செய்வார்?
சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் ப்ளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
2020 சீசன் போல இல்லாமல் 2021 சீசனை சிஎஸ்கே மிகவும் சிறப்பாகவே தொடங்கியது. முதல் அணியாக சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பின்தான் சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது.
முக்கியமாக வரிசையாக மூன்று போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த தொடர் தோல்விகள் சிஎஸ்கே ரசிகர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தோல்விகள்
ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் என்று முக்கியமான அணிகளுக்கு எதிராக வரிசையாக சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. தொடரில் வெற்றிபெற வேண்டிய நேரத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. ப்ளே நேரத்தில் சிஎஸ்கே உடனே மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ப்ளே ஆப் சுற்றில் சிஎஸ்கே பெரும்பாலும் டெல்லியை எதிர்கொள்ள உள்ளது.

பிரச்சனை
சிஎஸ்கே அணியில் இப்போது ஓப்பனிங் நன்றாகவே இருக்கிறது. ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாகவே ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மிடில் ஆர்டர்தான் சிஎஸ்கேவில் சொதப்பிக்கொண்டு இருக்கிறது. மிடில் ஆர்டரில் ராயுடு மட்டும்தான் ஆடுகிறார். அதன்பின் ஜடேஜா ஆடுகிறார். மற்றபடி ரெய்னா, மொயின் அலி, தோனி என்று யாருமே ஆடவில்லை.

மோசம்
முக்கியமாக ரெய்னாவிற்கு மாற்றாக இருக்கும் உத்தப்பா மோசமாக சொதப்பி வருகிறார். ரெய்னாவிற்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இரண்டு போட்டியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் இடத்தில இறங்கும் உத்தப்பாவும் சரியாகவில்லை. ரெய்னா அளவிற்கு கூட உத்தப்பா கூட நம்பிக்கை அளிக்கவில்லை. இதுதான் சிஎஸ்கேவிற்கு சிக்கலாகி முடிந்துள்ளது.

சிக்கல்
ஏனென்றால் இப்போது ரெய்னாவின் காயம் சரியாகவில்லை. ரெய்னா இதனால் ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களிலும் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் காயம் சரியாகாத காரணத்தால் ரெய்னா ப்ளே ஆப் சுற்றில் டெல்லிக்கு எதிராக ஆட வாய்ப்பு குறைவாக உள்ளது. இது சிஎஸ்கேவிற்கு மேலும் பின்னடைவாக மாறியுள்ளது.
Recommended Video

பின்னடைவு
ரெய்னாவும் இல்லை, உத்தப்பாவும் பார்மில் இல்லை. மொயின் அலியும் சரியாக ஆடுவது இல்லை என்பதால் சிஎஸ்கே அணி கொஞ்சம் கலக்கத்தில் உள்ளது. இதை தோனி எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனில் மிடில் ஆர்டர் எப்படி சிஎஸ்கேவிற்கு சொதப்பியதோ அதேபோல் இந்த சீசனிலும் கடைசி கட்டத்தில் சிஎஸ்கேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications