அதிர்ஷ்டமே இல்லாத தோனி.. சிஎஸ்கே வெற்றிபெற இதுமட்டும்தான் ஒரே சான்ஸ்.. காத்திருக்கும் சோதனை!
சென்னை: இன்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோனி டாஸ் வெல்லும் பட்சத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
2021 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடக்க உள்ளது. 2012ல் கொல்கத்தாவிடம் பைனலில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே தோல்வி அடைந்தது.
அதன்பின் மீண்டும் 9 வருடங்கள் கழித்து சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. தோனிக்கு இது பெரும்பாலும் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்பதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

வெற்றி பெற வேண்டும்
இன்றைய பைனல் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்றால் சிஎஸ்கேவிற்கு வீரர்கள் பார்ம் மட்டுமின்றி மற்ற சில விஷயங்களும் கை கொடுக்க வேண்டும். முக்கியமாக பிட்ச், டாஸ் வெல்வது, அதோடு ட்யூ எனப்படும் பனிபொழிவால் ஏற்படும் ஈரப்பதம் ஆகியவையும் சிஎஸ்கேவிற்கு சாதகமாக இருக்க வேண்டும்.
Recommended Video

வரலாறு சாதகம்
ஐபிஎல் வரலாற்றின்படி பார்த்து கொல்கத்தாவை சிஎஸ்கே இதுவரை 24 முறை எதிர்கொண்டு இருக்கிறது. அதில் அதிகமாக வென்றது என்னவோ சிஎஸ்கேதான். 16 முறை சிஎஸ்கே இதில் வென்றுள்ளது. கடைசியாக 2 லீக் ஆட்டங்களிலும் சிஎஸ்கேதான் வென்றது. அதனால் சிஎஸ்கேவின் கை கொஞ்சம் ஓங்கி இருக்கிறது.

பிட்ச் எப்படி?
இன்று போட்டி நடக்கும் துபாய் மைதானம் சேசிங் செய்ய கூடிய அணிக்கு சாதகமாக இருக்கும். டாஸ் வெல்லும் அணி சேசிங் தேர்வு செய்ய வேண்டும். துபாயில் ஐபிஎல் போட்டிகளில் நடந்த 12 மேட்சில் 9ல் சேசிங் செய்த அணிதான் வென்றுள்ளது. அதோடு அமீரகத்தில் நடந்த இரண்டாவது பாதி ஐபிஎல் ஆட்டம் முழுக்க 6 போட்டியில் கொல்கத்தா வென்றது. இதில் ஆறிலும் கொல்கத்தா சேசிங்தான் செய்தது.

சாதகம் இல்லை
அதேபோல் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து இந்த சீசனில் 5 தடவை தோல்வி அடைந்துள்ளது. சிஎஸ்கேவிற்கு முதலில் பேட்டிங் செய்வது இந்த சீசனில் எதிராகவே இருந்துள்ளது. துபாய் மைதானம் இரண்டு அணிக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இல்லை. இரண்டு அணிகளுமே துபாயில் 50 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளன. இருப்பினும் இன்று டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்யும் அணி மட்டுமே வெற்றியை பெறும்.

டாஸ் வெல்வதே ஒரே வழி
ஏனென்றால் டாஸ் வெல்வதன் மூலம் கொல்கத்தாவை முடிந்த அளவு குறைந்த ரன்னுக்கு சிஎஸ்கே சுருட்ட முடியும். முதலில் ஆடிய போது வெங்கடேஷ் ஐயர், கில் போன்றவர்கள் பெரிதாக அதிரடி காட்டவில்லை. கொல்கத்தாவின் மிடில் ஆர்டரும் வீக்காக இருக்கிறது. இதனால் முதலில் பவுலிங் செய்து கொல்கத்தாவின் டாப் ஆர்டரை காலி செய்தால் சிஎஸ்கே எளிதாக வென்றுவிடும்.

பனி
அதோடு பனிப்பொழிவு காரணமாக இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஈரப்பதம் ஏற்படும். இது பவுலிங் செய்ய கஷ்டமான சூழ்நிலையை ஏற்படுத்தும். முக்கியமாக கொல்கத்தாவின் ஸ்பின் பவுலர்கள் திணறுவார்கள். அப்படி இருக்கும் போது சிஎஸ்கே டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். தோனிக்கும் டாஸ் தோல்வி அடைவது இந்த சீசனில் எதிராகவே சென்றுள்ளது. டாஸ் தோல்வி அடைந்து பேட்டிங் செய்வது எப்போதுமே தோனிக்கு அதிர்ஷ்டம் கிடையாது.

தோனிக்கு ராசி இல்லையா?
இந்த சீசனில் தோனி 9 போட்டியில் டாஸ் தோல்வி அடைந்தார். அதில் 4ல் மட்டுமே சிஎஸ்கே வென்றது. இதில் 2 போட்டி பேட்டிங் பர்ஸ்ட். இரண்டு போட்டி பவுலிங் பர்ஸ்ட். மீதமுள்ள 5 தோல்வி அடைந்த போட்டிகளும் டாஸ் தோல்வி அடைந்து பேட்டிங் பர்ஸ்ட் செய்தது ஆகும். அதாவது புள்ளி விவரத்தின்படி தோனி டாஸ் தோல்வி அடைந்து ஒருவேளை பேட்டிங் பர்ஸ்ட் செய்தால் பெரும்பாலும் சிஎஸ்கே தோல்வி அடையவே வாய்ப்பு அதிகம்.

பைனல் ராசி
அதோடு அதிர்ஷ்டப்படி சிஎஸ்கே பைனலில் சரியாக ஆடியதே இல்லை. 9 முறை பைனல் வந்த சிஎஸ்கே 3 முறை மட்டுமே வென்றுள்ளது. இதனால் தோனி இன்று எப்படியாவது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்வதே பைனல் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
-
MS Dhoni: யப்பா.. அது தோனியோட குழந்தை இல்லை.. ஒரேயொரு புகைப்படத்தால் ரணகளமான சோசியல் மீடியா! -
சின்ன தல ரெய்னா பாடிய சூர்யா பாட்டு.. வாழ்க்கையில் யாரும் இப்படி கேட்டிருக்க முடியாது.. சேப்பாக்கமே அதிர்ந்து போச்சு -
ருதுராஜ் பந்தை இப்படி விளாசிட்டாரே.. சிஎஸ்கே ஜெர்சியை போட்டுட்டு வாங்க ஹசி.. தோனி கொடுத்த ரியாக்சன்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications