"அவனுக்கு ஒன்னும் தெரியாது".. விடாமல் தமிழில் பேசிய டிகே - வருண் ஜோடி.. ஹர்ஷா போக்லே அடித்த கமெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி வீரர்கள் தினேஷ் கார்த்திக் - வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தமிழில் பேசிக்கொண்டது இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஐபிஎல் 2021 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நாளை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான பைனல் ஆட்டம் நடக்க உள்ளது. நேற்று கொல்கத்தா அணி டெல்லியை குவாலிபையர் ஆட்டத்தில் வென்று பைனல் சென்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி மோசமான பேட்டிங் காரணமாக 20 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவரில் 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த மேட்சில் கொல்கத்தா அணி வீரர்கள் தினேஷ் கார்த்திக் - வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தமிழில் பேசிக்கொண்டது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. பொதுவாக தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் களத்தில் பல மொழிகளில் பேச கூடியவர். தெலுங்கு பூர்வீகம் என்பதால் தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார். அவ்வப்போது சஞ்சு சாம்சனிடம் மலையாளத்திலும் பேசி இருக்கிறார். இந்தி, ஆங்கிலமும் சரளமாக பேச கூடியவர். கொல்கத்தா அணியில் இப்போது மூன்று தமிழக வீரர்கள் ஆடுகிறார்கள்.

கொல்கத்தா

கொல்கத்தா

வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தமிழ் மொழி தெரிந்தவர்கள். அதோடு சுனில் நரேன் ஒரு சில தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டு பேசி வருகிறார். இதனால் வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி ஆகியோரிடம் தினேஷ் கார்த்திக் தமிழில்தான் பொதுவாக பேசுவார். அதுவும் வருண் வந்துவிட்டால் போதும் "சின்ராசை கையிலேயே பிடிக்க முடியாது" என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து டிகே தமிழிலேயே பேசுவார்.

தமிழில் பேசினார்

தமிழில் பேசினார்

அதன்படியே நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியிலும் தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியிடம் தமிழில் பேசினார். ஷ்ரேயாஸ் பேட்டிங் செய்த போது எப்படி போட வேண்டும் என்று கூறினார். நீ எப்படி போடுவேனுக்கு அவனுக்கு தெரியல.. நீ நல்லா போடுற.. அப்படியே போடு.. உள்ளே போடு என்று கூறினார். 15வது ஓவரில் தமிழில் முழுக்க முழுக்க வருண் சக்கரவர்த்தியிடம் பேசினார்.

 17பவது

17பவது

அதன்பின் மீண்டும் 17வது ஓவரில் வருண் பவுலிங் செய்த போதும் வருணிடம் மீண்டும் தினேஷ் தமிழில் பேசினார். வருண் போடு.. உன்னை பார்த்து அவன் எதோ யோசிக்கிறேன். நீ நியாபகம் வச்சுக்கோ. அவன் லாஸ்ட் போட்டியில் இப்படித்தான் அவுட் ஆகி இருக்கான். என்ன செய்யுறதுன்னு தெரியாமல் குச்சி மேல் பந்தை வாங்கி அவுட் ஆகி இருக்கான்.

என்ன போடுவா?

என்ன போடுவா?

நீ உள்ள போடு.. நீ அவனுக்கு என்ன போடா போறேன்னு தெரியலை. உன் கையை பார்க்க சொல்லி (நான் ஸ்டிரைக்கர் கிட்ட) இருக்கான். நீ போடு. இப்படித்தான் போடணும்.. வா.. வா என்று கூறினார். தினேஷ் இப்படி தமிழில் பேசியதை தமிழ் வர்ணனையாளர்கள் ரசித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தனர். அதே சமயம் இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் ஹர்ஷா போக்லா வர்ணனை செய்து கொண்டு இருந்தார். தினேஷ் கார்த்திக் பேசுவதை கேட்டு.. இந்த சேனல் ஆங்கில வர்ணனை சேனல்தான். ஆனால் மைதானத்தில் தமிழில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஹர்ஷா கிண்டலாக குறிப்பிட்டார்.

ரசித்தார்

ரசித்தார்

தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியதை ஹர்ஷா போக்லே ரசித்துக்கொண்டு இருந்தார். சிரித்தபடி இவர்கள் பேசியதை ஹர்ஷா கேட்டுக்கொண்டு இருந்தார். ஹர்ஷா போக்லே ஹைதராபாத்தில் வளர்ந்தவர் என்பதால் அவர் தினேஷ் கார்த்திக்குக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் சக்கரவர்த்திக்கு தினேஷ் கார்த்திக் தொடர்ந்து இது போன்ற ஆலோசனைகள் வழங்குவது அவர் விக்கெட் எடுக்கவும் பெரிய அளவில் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+