தோனிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.. பைனலுக்கு முன் சிஎஸ்கேவில் முக்கிய குழப்பம்.. டீமில் என்ன நடக்கிறது?
சென்னை: ஐபிஎல் 2021 தொடரின் பைனல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பைனல் ஆட்டத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி பைனல் சென்றுவிட்டது. இனி பைனல் வரப்போகும் அணிக்காக சிஎஸ்கே காத்திருக்க வேண்டும்.
இதற்கான இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது. டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இன்று போட்டி நடக்க உள்ளது. இதில் வெற்றிபெறும் அணியை சிஎஸ்கே பைனலில் எதிர்கொள்ளும்.

எப்படி
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது ராபின் உத்தப்பாதான். இவரின் அதிரடி ஆட்டம் காரணமாகத்தான் சிஎஸ்கே அந்த போட்டியில் வென்றது. வெறும் 44 பந்தில் 2 சிக்ஸ் உட்பட 63 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்கு மிக சிறப்பான தொடக்கத்தை ராபின் உத்தப்பாதான் கொடுத்தார். இந்த நிலையில்தான் அடுத்த போட்டியில் உத்தப்பா ஆடுவது சந்தேகமாகி உள்ளது.

உத்தப்பா
உத்தப்பா சிஎஸ்கே அணியில் ரெய்னாவிற்கு பதிலாக களமிறங்கினார். ரெய்னாவின் காலில் காயம் ஏற்பட்டதால் உத்தப்பா உள்ளே கொண்டு வரப்பட்டார். முதல் இரண்டு போட்டியில் உத்தப்பா சொதப்பினாலும் கடந்த போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிபெற வைத்தார். இப்போது ரெய்னாவின் காயமும் சரியாகிவிட்டது.

ரெய்னா
ரெய்னா சிறப்பாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதோடு ஜிம்மிலும் பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. அவர் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதால், மீண்டும் அணிக்குள் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் ரெய்னா, உத்தப்பா இருவரில் யார் சிஎஸ்கே அணியில் ஒன் டவுன் இறங்குவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

தோனி
பார்மில் இல்லாத ரெய்னாவிற்காக கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய உத்தப்பாவை நீக்கவும் முடியும். அதேபோல பைனல் ஆட்டத்தில் ரெய்னா இல்லாமல் இறங்கும் முடிவை தோனி எடுப்பாரா என்பதும் சந்தேகம்தான். இதனால் இரண்டு பேரில் சிஎஸ்கே அணியில் இறங்க போகும் வீரர் யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தர்மசங்கடம்
தோனி யாரை தேர்வு செய்வார், யாருக்கு வாய்ப்பு வழங்குவார் என்பது பெரிய குழப்பமாக உள்ளது. இது சிஎஸ்கே அணிக்குள் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. மொயின் அலி பார்மில் இல்லை என்றாலும் பவுலிங் ஆப்ஷனுக்காக அவர் ஆட வேண்டும் என்பதால், ரெய்னா, உத்தப்பா ஆகிய ஒருவரில்தான் பைனல் ஆட்டத்தில் ஆடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications