அந்த வீரரின் எதிர்காலமே க்ளோஸ் போல.. இந்திய ஆல் ரவுண்டரை கலங்கடிக்க போகும் தமிழர்.. செம திருப்பம்
சென்னை: இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் தேடலுக்கு தமிழர் ஒருவர் விடையாக இருக்க போவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூற தொடங்கி உள்ளனர்.
Recommended Video
இந்திய அணி கடந்த சில வருடமாகவே நல்ல பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டரை தேடிக்கொண்டு இருக்கிறது. விஜய் சங்கர் போன்றவர்களை கூட இந்தியா சோதனை செய்து பார்த்தது. இதில் இந்தியா இதுவரை அதிகம் பயன்படுத்திய வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியாதான்.
இவரை ஒருநாள், டெஸ்ட், டி 20 என்று அனைத்திலும் இந்திய அணி பயன்படுத்தியது. டெஸ்டில் இவர் சரியாக ஆடாத நிலையில் மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

டெஸ்ட்
இப்போது டெஸ்ட் போட்டியில் இந்தியா பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக ஷரத்துல் தாக்கூரை பயன்படுத்தி வருகிறது. தாக்கூரும் மிகவும் சிறப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார். ஆனால் ஒருநாள், டி 20 போட்டிகளில் இவர் அதிகம் ரன் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியா பெரிதாக ஒருநாள், டி 20 போட்டிகளில் ஆடுவது இல்லை. 2019ல் ஏற்பட்ட காயம் காரணமாக பவுலிங்கும் செய்வது இல்லை.

பவுலிங்
எப்போதாவது பவுலிங் செய்தாலும் பெரிதாக விக்கெட் எடுப்பது இல்லை. பேட்டிங்கும் பினிஷிங் செய்யும் அளவிற்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. கடந்த உலகக் கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியிலும் சரி, மும்பை அணியிலும் சரி ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் அவ்வளவு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்லை. இதனால் இவருக்கு மாற்றாக அணியில் மீண்டும் தாக்கூர் கொண்டு வரப்படலாம் என்ற கருதப்படுகிறது.

தாக்கூர்
தாக்கூருக்கு மேலும் சில வாய்ப்புகள் வழங்கப்படும் என்றே கருதப்படுகிறது. அதே சமயம் கொல்கத்தா அணியில் ஆடி வரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தமிழரான வெங்கடேஷ் ஐயர் அதிக கவனம் பெற்றுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிய வெங்கடேஷ், மூன்றாவது போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக டெத் ஓவர்களில் நன்றாக வீசினார். மும்பைக்கு எதிராக வெறும் 30 பந்தில் 53 ரன்கள், பெங்களூருக்கு எதிராக 27 பந்தில் 41 ரன்கள் என்று இவர் அறிமுக போட்டிகளிலேயே சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தார்.

பேட்டிங்
பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கி வருகிறார். கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங்தான் இவ்வளவு நாள் பிரச்சனையாக இருந்தது. அதை இவர் சரி செய்துவிட்டார். மீடியம் பாஸ்ட் பவுலிங்கிலும் நன்றாக ரன் கொடுக்காமல் பவுலிங் செய்து வருகிறார். இன்றும் கூட டெல்லிக்கு எதிராக 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இத்தனை நாள் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தவர் இன்று பவுலிங்கிலும் நம்பிக்கை அளித்தார்.

விக்கெட்
இன்று ஹெட்மயர் மற்றும் அக்சர் விக்கெட்டுகளை வெங்கடேஷ் எடுத்தார். இவர் முதல் தர போட்டிகளில் இதை விட சிறப்பான பவுலிங் பிகர் வைத்து உள்ளார். இன்னும் கொஞ்சம் பவுலிங் வேகத்தை உயர்த்தினால் இவர் மிக சிறப்பான வீரராக உருவெடுப்பார் என்று கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா சரியாக பவுலிங் போடாத நிலையில், பெரிதாக விக்கெட் எடுக்காத நிலையில் அவரின் இடத்தை இவர் நிரப்பும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஓப்பனிங்
ஏனென்றால் ஓப்பனிங்கும் இவர் இறங்குகிறார். நல்ல உயரமாக இருப்பதால் பவுன்சர்களை வீச முடியும். ஆல் ரவுண்டர் பாண்டியாவிற்கு இவர் சிம்ம சொப்பனமாக இருப்பார்.இதனால் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலத்தை காலி செய்ய வெங்கடேஷ் ஐயருக்கு நிறைய வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் வளர்ந்தவர் என்றாலும் இவர் தமிழர் என்பதால் இவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications