கனத்த இதயத்தோடு முடிவெடுத்த சிஎஸ்கே.. 2 முக்கிய வீரர்களுக்கு டாட்டா.. உயிரை கொடுத்து ஆடினார்களே!
சென்னை: சிஎஸ்கே அணி 2022 ஐபிஎல் தொடருக்காக யாரை எல்லாம் ரீ டெயின் செய்ய போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முக்கியமான இரண்டு வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
2021 ஐபிஎல் தொடரே இப்போதுதான் முடிந்தது போல இருக்கிறது. இந்த நிலையில் 2022 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடக்க தொடங்கிவிட்டன.
2022 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக ரீ டெயின் செய்யும் வீரர்களின் பட்டியலை எல்லா அணிகளும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீ டெயின்
அதாவது ஏற்கனவே அணியில் இருக்கும் வீரர்களை மீண்டும் அணியில் தக்க வைத்துக்கொள்வது ஆகும். ஒவ்வொரு அணியும் 4 வீரர்கள் வரை ரீ டெயின் செய்ய முடியும். அதேபோல் ஆர்டிஎம் ஆப்ஷன் இந்த முறை ஏலத்தில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் ரீ டெயின் செய்யும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

உத்தேச பட்டியல்
அதன்படி சிஎஸ்கே அணி தோனி, ருத்துராஜ், ஜடேஜா, மொயின் அலி அல்லது சாம் கரண் ஆகியோரை ரீ டெயின் செய்யும் என்று கூறப்படுகிறது. அதன்படி சிஎஸ்கே கனத்த இதயத்தோடு பல முக்கியமான வீரர்களுக்கு விடை கொடுப்பதாக தகவல்கள் வருகின்றன. 2018 சீசனில் இருந்தே சிஎஸ்கே அணியில் தொடர்ந்து நன்றாக ஆடி வந்தவர் டு பிளசிஸ். ஆனால் இவரை சிஎஸ்கே ரீ டெயின் செய்யவில்லை.

ரீ டெயின் இல்லையா?
பொதுவாக சிஎஸ்கே அணி வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை ரீ டெயின் செய்யாது. மாறாக ஏலத்தின் போது குறைந்த விலையில் எடுக்கவே முயற்சி செய்யும். இதற்கு முன்பும் சிஎஸ்கே அப்படிதான் செய்துள்ளது. சமயங்களில் மொத்தமாக ஓப்பனிங் இணையை சிஎஸ்கே மாற்றும். இதனால் ஒருவேளை டு பிளசிஸ் மொத்தமாக அணியில் இருந்து கழற்றிவிடப்படுகிறாரோ என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

சிஎஸ்கே
இதற்கு முன்பே சிஎஸ்கே இதேபோல் சில வெளிநாட்டு ஒப்பனர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரெய்னாவையும் இந்த முறை சிஎஸ்கே ரீ டெயின் செய்யவில்லை. சிஎஸ்கே வரலாற்றில் முதல்முறை அவர் ரீ டெயின் செய்யப்படவில்லை. அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் அகமதாபாத் அணிக்கு ரெய்னா செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ரெய்னா
இதனால் சிஎஸ்கேவில் ரெய்னா அடுத்த வருடம் ஆடுவது சந்தேகமான விஷயமாகவே இருக்கிறது. ரெய்னாவின் மோசமான பார்ம், அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு அறிவிக்கலாம் என்ற காரணங்களால் அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அணியில் இருந்து நீக்கிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பல முக்கியமான வீரர்களை சிஎஸ்கே இந்த மெகா ஏலம் காரணமாக இழக்க நேரிடும்.

கனத்த இதயம்
ரெய்னா, டு பிளசிஸ் எல்லாம் சிஎஸ்கேவிற்காக உயிரை கொடுத்து ஆடிய வீரர்கள். ஆனால் ரீ டெயின் ரூல்ஸ் காரணமாக அவர்களை கைவிடும் நிலை சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது. மிகுந்த கனத்த இதயத்தோடுதான் நான்கு வீரர்களை மட்டும் சிஎஸ்கே ரீ டெயின் செய்துள்ளது என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காசு இருக்கும் பட்சத்தில் இவர்களை ஏலத்தில் சிஎஸ்கே எடுக்க முயலும். இல்லையென்றால் டாட்டாதான்.

புதிய கோர்
அதோடு சிஎஸ்கே அணி புதிய கோர் டீம் ஒன்றை உருவாக்க போவதாக தகவல்கள் வருகின்றன. அதாவது மொத்தமாக இளம் வீரர்களை வைத்து அணியை உருவாக்கவும், கேப்டனுக்கு தகுதியான ஒரு வீரரை உருவாக்கவும் சிஎஸ்கே முயல்வதாக தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாகவே பல மூத்த வீரர்கள் கழற்றிவிடப்பட்டு உள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications