நச்சுனு பிளான் போட்டு.. 26 வயது இளம் வீரரை தூக்கிய தோனி.. என்ன காரணம்? சிஎஸ்கேவின் இமாலய பிளான்!
சென்னை; 2022 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான இளம் வீரர் ஒருவரை ஏலம் எடுத்துள்ளது.
Recommended Video
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று நடந்தது. மீதம் உள்ள வீரர்கள் இன்று ஏலம் விடப்பட உள்ளனர்.
நேற்று இஷான் கிஷான் அதிகபட்சமாக 15.25 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டார். அதேபோல் தவான் பஞ்சாப் அணிக்கும், ஷ்ரேயாஸ் கொல்கத்தா அணிக்கும், அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கும், டு பிளசிஸ் பெங்களூர் அணிக்கும் ஏலம் விடப்பட்டனர்.

ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர் டெல்லி அணிக்கு ஏலம் விடப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் நேற்று சிஎஸ்கே நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. சிஎஸ்கே தொடக்கத்தில் எந்த வீரர்களுக்கும் ஏலம் கேட்கவில்லை. கடைசியில் ஷாருக்கான், திவாட்டியா போன்ற வீரர்களை மட்டுமே சிஎஸ்கே ஏலம் கேட்டது. இடையில் பெரிதாக சிஎஸ்கே பலரை ஏலம் எடுக்கவில்லை.

சிஎஸ்கே
ஆனால் சிஎஸ்கே முடிந்த வரை தங்கள் பழைய டீமை எடுப்பதிலேயே தீவிரமாக இருந்தது. இதன் காரணமாகவே சாஹரை 14 கோடி ரூபாய் வரை கொடுத்து சிஎஸ்கே எடுத்தது. ராயுடுவை ஹைதராபாத் அணியோடு போட்டி போட்டு 6.75 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எடுத்தது. பிராவோவையும் 4.40 கோடிக்கு ஹைதராபாத் அணியோடு போராடி சிஎஸ்கே எடுத்தது. ஷர்துல், டு பிளசிஸ், ஹஸல்வுட் ஆகியோர் தவிர மற்ற வீரர்களை சிஎஸ்கே அணி மீண்டும் எடுத்துவிட்டது.

சிஎஸ்கே பிளான்
இந்த நிலையில் சிஎஸ்கேவில் ஹஸல்வுட் இல்லாத காரணத்தால் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்யும் வீரர்கள் இல்லை. நன்றாக பவுன்சர் வீச கூடிய, அதிக வேகத்தில் பவுலிங் செய்ய கூடிய வீரர்கள் இல்லாத நிலை உள்ளது. லுங்கி நிகிடியும் அணியில் இல்லை. இப்போது அணியில் உள்ள சாகர் ஸ்விங் போடுபவர். பிராவோ ஸ்லோ பால் வீசுவார். இதனால் சிஎஸ்கேவிற்கு நல்ல பாஸ்ட் பவுலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தோனி
இதை பூர்த்தி செய்யவே நேற்று தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துஷார் தேஷ்பாண்டே என்ற 26 வயது இளைஞரை எடுத்தது. மும்பையை சேர்ந்த இவர் கிளாஸ் ஏ கிரிக்கெட் வீரர் ஆவார். 2016 -17 ரஞ்சி தொடரில் மும்பை அணியாகக் மிக சிறப்பாக ஆடினார். அதேபோல் 2018-19 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 5 விக்கெட் haul உட்பட பல போட்டிகளில் சிறப்பாக விக்கெட் எடுத்தார்.

டெல்லி
இதனால் கடந்த 2020 சீசனில் டெல்லி அணிக்கு எடுக்கப்பட்டார் துஷார் தேஷ்பாண்டே. அந்த தொடரில் 5 போட்டி ஆடி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு நெட் பவுலிங்கில் சில போட்டிகள் பவுலிங் செய்தார். இவரின் திறமையே 150 கிலோ மீட்டர் வேகத்தில் யார்க்கர், பவுன்சர் வீசுவதுதான். இவர் கிளாஸ் ஏ போட்டிகளில் பல முறை இப்படி பவுலிங் செய்துள்ளார். வெறும் 20 லட்சத்திற்கு இவர் எடுக்கப்பட்டார்.

துஷார் தேஷ்பாண்டே
அதேபோல் இந்திய அணிக்கும் கடந்த 3 வருடங்களாக அவ்வப்போது இவர் நெட் பவுலிங் செய்து வருகிறார். வெளிநாட்டு தொடர்களுக்கு இந்திய அணி செல்லும் போது துஷார் தேஷ்பாண்டே இந்திய அணியின் நெட் பவுலராக சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். ஷரத்துல் தாக்கூருக்கு பதிலாக சிஎஸ்கே இவரை முழு நேர பவுலராக் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. சிஎஸ்கே அணியில் இப்போது அப்படி பவுலர்கள் யாரும் இல்லை என்பதால் தேஷ்பாண்டேவை சிஎஸ்கே எடுத்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications