ஒரேயொரு வார்த்தை.. தோனியை புகழ்ந்த ஸ்காட் ஸ்டைரிஸ்.. சட்டென கோபமான சிஎஸ்கே ரசிகர்கள்.. என்னாச்சு?
சென்னை: சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியை நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்காட் ஸ்டைரிஸ் பெருமையாக புகழ்ந்து பேசிய நிலையிலும் திடீரென சிஎஸ்கே ரசிகர்கள் கோபமடைந்து அவரை விமர்சனம் செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு ஸ்காட் ஸ்டைரிஸ் பயன்படுத்திய ஒரு வார்த்தை தான் முக்கிய காரணமாகும். அந்த வார்த்தை என்ன? ஏன் சிஎஸ்கே ரசிகர்கள் ஸ்காட் ஸ்டைரிஸை விமர்சனம் செய்தனர்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
ஐபிஎல் கிரிக்கெட்டின் 16வது சீசன் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று கோலாகலமாக இந்த போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோத உள்ளன.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்த உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்எஸ் தோனி தலைமையில் களமிறங்க உள்ளார். எம்ஸ் தோனி தனது காலில் லேசான காயமடைந்து இருந்தாலும் கூட இந்த போட்டியில் அவர் விளையாடுவார் என்றே கூறப்படுகிறது.

ஸ்காட் ஸ்டைரிசுக்கு எதிர்ப்பு
இந்நிலையில் தான் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான ஸ்காட் ஸ்டைரிஸை சிஎஸ்கே மற்றும் தல தோனி ரசிகர்களில் ஒரு பகுதியினர் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். ஸ்காட் ஸ்டைரிஸ் தற்போது வர்ணணையாளராக இருக்கும் நிலையில் தோனி ரசிகர்களால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளார்.

ஒற்றை வார்த்தை தான்..
இதற்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்று தான். அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி பயிற்சி மேற்கொண்டது தொடர்பான வீடியோவுக்கு ஸ்காட் ஸ்டைரிஸ் செய்த கமெண்ட்டில் பயன்படுத்திய ஒற்றை வார்த்தை தான் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சி தொடர்பான வீடியோக்கள் சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.

ட்விட்டரில் வெளியான வீடியோ
அப்போது ஹெல்மெட் அணிந்து பேட்டிங்கிற்காக எம்எஸ் தோனி களமிறங்கும் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி ‛‛நாயகன் மீண்டும் வரார்''என பதிவிட்டு இருந்தது. வீடியோவில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவே தோனி மைதானத்தை நோக்கி நடந்து செல்கிறார். அவர் கிரீசுக்கு செல்லும் வரை தொடர்ந்து ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்கின்றனர்.

ஸ்காட் ஸ்டைரிஸ் கமெண்ட்
இந்த வீடியோவை பார்த்த பலரும் எம்எஸ் தோனியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை. எம்எஸ் தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் இடையேயான காதல் இன்னும் குறையவில்லை என தெரிவித்தனர். இதுபற்றி நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஸ்காட் ஸ்டைரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛Still the big dog around the town'' என தெரிவித்து இருந்தார்.

விமர்சனத்துக்கு காரணம் என்ன?
அதாவது சென்னை அணியை பொறுத்தமட்டில் தோனி தான் சக்திவாய்ந்த நபராக இன்னும் தொடர்கிறார் என்பதை குறிக்கும் வகையில் அவர் ஆங்கில phrase பயன்படுத்தி கூறியிருந்தார். இதனை பலரும் புரிந்து கொண்ட நிலையில் சிலர் தவறாக அர்த்தப்பட்டு ஸ்காட் ஸ்டைரிஸை விமர்சிக்க தொடங்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அதன்பிறகு அர்த்தத்தை அறிந்து விமர்சனம் செய்தவர்கள் அமைதியானார்கள். இந்த குழப்பத்தை தொடர்ந்து பலரும் தோனியின் பெருமையை கூற ஸ்காட் ஸ்டைரிஸ் வேறு பார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கெவின் பீட்டர்சன் பெருமை
முன்னதாக தோனியின் இந்த வீடியோ குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பெருமையாக கூறியிருந்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இது ஒரு பயிற்சி ஆட்டம். ஆனாலும் இங்கே பாருங்கள் ஐபிஎல் வீரர்கள் எப்படி மிகப்பெரிய அளவில் ஆதரிக்கப்படுகிறார். ரசிகர்களால் நேசிக்கப்படுகிறார்கள்'' என பெருமையாக கூறியிருந்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications