மேட்சை மாற்றிய அந்த "ஓவர்".. கதறவிட்ட கில்.. அது மட்டும் நடக்கலைன்னா.. சிஎஸ்கே வென்று இருக்கும்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி திரில் வெற்றிபெற்றுள்ளது. இதில் குஜராத் அணியின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் இடையிலான முதல் ஐபிஎல் 2023 மேட்ச் அதிரடியாக நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டிக்கு உரிய எல்லா பரபரப்புகளுடன் இன்றைய ஆட்டம் சென்றது.

இன்று சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வாய் , ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதில் முதல் இன்னிங்சில் சிஎஸ்கே அணி 20 இவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இன்று தொடக்கத்தில் இருந்து கான்வே மிகவும் மெதுவாக ஆடினார். அதோடு பந்து சரியாக பேட்டில் மாட்டாமல் திணறினார். 6 பந்துகள் பிடித்தவர் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதன்பின் ஷமி பந்தில் கிளீன் போல்ட் ஆனார். ஆனால் அதன்பின் ருத்துராஜ் வேகம் காட்டி அதிரடியாக ஆடினார். இன்று ருத்துராஜ் பவுண்டரிகளை விட சிக்ஸர்களைத்தான் அதிகம் அடித்தார். 4 பவுண்டரி, 9 சிக்ஸர்களை அவர் அடித்தார். இன்று மொத்தம் 50 பந்துகளை பிடித்த அவர் 92 ரன்கள் எடுத்தார். ருத்துராஜ் - மொயின் அலி இரண்டு பேருமே சிக்ஸ் பவுண்டரி என்று அதிரடி காட்ட தொடங்கினார்கள். 17 பந்துகள் பிடித்த மொயின் அலி 4 பவுண்டரி, 1 சிக்ஸ் என்று 23 ரன்கள் எடுத்தார். அவரின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்த நிலையில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார்.

அவுட்

அவுட்

இன்னொரு பக்கம் அம்பதி ராயுடுவும் வேகமாக ஆடிக்கொண்டு இருந்தார். 11 பந்தில் 1 சிக்ஸ் அடித்த அவர் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஸ்வா லிட்டில் பந்தில் போல்ட் ஆனார். இன்னொரு பக்கம் துபே ஆமை வேகத்தில் ஆடி 18 பந்தில் வெறும் 19 ரன்கள் மட்டும் எடுத்தார். கடைசியில் வந்த தோனி அதிரடியாக ஆடி 7 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். இதில் கடைசி ஓவரில் அவர் சிக்ஸ் ஒன்றும் அடித்தார். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 178-7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது.

குஜராத்

குஜராத்

குஜராத் ஓப்பனிங் வீரர் கில் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி சிஎஸ்கே அணியை கதறவிட்டார். அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த சாகாவை 3.5வது ஓவரில் ஹாங்கரேக்கர் அவுட் செய்தார். 25 ரன்கள் எடுத்து அவர் அவுட்டான பின் கில் வேகமாக ஆடி அரை சதம் அடித்தார். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சுதர்ஷனை 22 ரன்கள் எடுத்து இருந்த போது 9.3 வது ஓவரில் ஹங்கேரக்கர் அவுட் செய்தார். அதுவரை குஜராத் கையில் இருந்த ஆட்டம் சிஎஸ்கே கைக்கு வந்தது. இந்த ஓவரில்தான் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கையே வந்தது. அதன்பின் ஜடேஜா ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் அவுட் ஆனார்.

ரன் ரேட்

ரன் ரேட்

அதன்பின் 13 மற்றும் 14வது ஓவரில் ரன் செல்வதை சிஎஸ்கே அணி கட்டுப்படுத்தியது. 13வது ஓவரில் சாகர் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் ஆட்டம் லேசாக சிஎஸ்கேம் பக்கம் திரும்பியது. இதன்பின் சாகர் வீசிய 19வது ஓவரில் முதல் பந்திலேயே பவுண்டரி, அதன்பின் சிக்ஸ், அதன்பின் ஒரு பவுண்டரி சென்றது. இந்த ஓவரில் அப்படியே மேட்ச் மாறியது. இதன் பின் கடைசி ஓவரில் திவாதியாவும் சிக்ஸ் அடிக்க, குஜராத் அணி எளிமையாக வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+