முரட்டு ஹிட்டர்.. அசுர வேக பவுலர்.. ஆஹா இப்படி ஒரு வீரரா? தோனி களமிறங்கிய டிரம்ப் கார்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கேவின் ஆடும் அணியில் ராஜ்வர்தன் ஹங்காகேகர் என்ற 19 வயதே கொண்ட இளம் வீரர் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் 2023 தொடர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று தொடங்கி உள்ளது. சிஎஸ்கே குஜராத் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி தற்போது நடக்கிறது.

அஹமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி தற்போது கோலாகலமாக துவங்கி உள்ளது.

குஜராத்

குஜராத்

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு எடுத்தது. சிஎஸ்கே அணியில் இன்று கான்வாய் - ருத்துராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வாய் , ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதில் மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மூன்று பேருமே நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இதனால் சிஎஸ்கே அணியில் 11 வீரர்களும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். சிஎஸ்கே அணி கடந்த ஏலத்தில் ராஜ்வர்தன் ஹங்காகேகர் என்ற இளம் வீரரை ஏலம் எடுத்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ்வர்தன் ஹங்காகேகரை ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி. மும்பை அணியை தொடக்கத்தில் இருந்தே இவரை எடுக்க முயன்றது. தொடக்கத்தில் இருந்தே இவரை எடுக்க மும்பை - சிஎஸ்கே இடையே கடும் போட்டி நிலவியது. 1.40 கோடி ரூபாய் வரை மும்பை இவரை எடுக்க தீவிரம் காட்டியது.

 ராஜ்வர்தன் ஹங்காகேகர்

ராஜ்வர்தன் ஹங்காகேகர்

ஆனால் சிஎஸ்கே அணி இவரை விட்டுக்கொடுப்பதாக இல்லை. கடைசியில் மும்பை அணி இவரை 1.50 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்க மும்பை அணி விரும்பவில்லை. இதனால் சிஎஸ்கே அணி ஒன்றரை கோடிக்கு ராஜ்வர்தன் ஹங்காகேகரை மும்பை தட்டி தூக்கியது. இவர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர். இவருடைய சிறப்பம்சம் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு இன் ஸ்விங் செய்ய கூடியவர். பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்ட் பவுலர்கள் அவுட் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ராஜ்வர்தன் ஹங்காகேக இன் ஸ்விங் செய்வார். அதோடு இவரின் இன்னொரு சிறப்பம்சம். இவர் சிறப்பான பேட்ஸ்மேனும் கூட. கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன். அண்டர் 19 போட்டிகளில் இவர் முரட்டு அடி அடித்த ஆட்டங்கள் பல உள்ளன.

பாஸ்ட் பவுலர்

பாஸ்ட் பவுலர்

ஹெலிகாப்டர் ஷாட், ஸ்விப் ஷாட் என்று விதவிதமாக சிக்ஸ் அடிக்க கூடியவர். கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெல்ல ஐவரும் முக்கிய காரணமாக இருந்தார். இதில் ராஜ்வர்தன் ஹங்காகேகர் 141 கிமீ வேகத்தில் பவுலிங் வீசினார். லோக்கல் போட்டிகளில் இவர் 148 கிமீ வரை பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாக ஆடினார். சிஎஸ்கே அணியில் சாகர் போல அடுத்த இளம் ஸ்டாராக இவர் உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+