அவர் தேவையே இல்லை.. இதை மட்டும் சிஎஸ்கே செஞ்சா.. மேட்ச் ரிசல்டே இனி மொத்தமா மாறும்.. தோனி யுக்தி?
சென்னை: சிஎஸ்கே அணி தங்களின் பிளேயிங் 11ல் எந்த மாற்றத்தையும் செய்யாமல் வேறு ஒரே ஒரு சின்ன மாற்றத்தை மட்டும் செய்தால் மிக எளிதாக வரும் போட்டிகளில் வெற்றிபெற முடியும். அது எப்படி வாருங்கள் பார்க்கலாம்.
குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி போராடி தோல்வி அடைந்தது . இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இடம்பெற்றனர்.
இதில் முதல் இன்னிங்சில் சிஎஸ்கே அணி 20 இவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது.

சிஎஸ்கே
தொடக்கத்தில் இருந்து கான்வே மிகவும் மெதுவாக ஆடினார். அதோடு பந்து சரியாக பேட்டில் மாட்டாமல் திணறினார். 6 பந்துகள் பிடித்தவர் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதன்பின் ஷமி பந்தில் கிளீன் போல்ட் ஆனார். ஆனால் அதன்பின் ருத்துராஜ் வேகம் காட்டி அதிரடியாக ஆடினார். இன்று ருத்துராஜ் பவுண்டரிகளை விட சிக்ஸர்களைத்தான் அதிகம் அடித்தார். 4 பவுண்டரி, 9 சிக்ஸர்களை அவர் அடித்தார். இன்று மொத்தம் 50 பந்துகளை பிடித்த அவர் 92 ரன்கள் எடுத்தார். ருத்துராஜ் - மொயின் அலி இரண்டு பேருமே சிக்ஸ் பவுண்டரி என்று அதிரடி காட்ட தொடங்கினார்கள். 17 பந்துகள் பிடித்த மொயின் அலி 4 பவுண்டரி, 1 சிக்ஸ் என்று 23 ரன்கள் எடுத்தார். அவரின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்த நிலையில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார்.

தோல்வி
கடைசியில் வந்த தோனி அதிரடியாக ஆடி 7 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். இதில் கடைசி ஓவரில் அவர் சிக்ஸ் ஒன்றும் அடித்தார். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 178-7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. கில் வேகமாக ஆடி அரை சதம் அடித்தார். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சுதர்ஷனை 22 ரன்கள் எடுத்து இருந்த போது 9.3 வது ஓவரில் ஹங்கேரக்கர் அவுட் செய்தார். சாஹர் வீசிய 19வது ஓவரில் முதல் பந்திலேயே பவுண்டரி, அதன்பின் சிக்ஸ், அதன்பின் ஒரு பவுண்டரி சென்றது. இந்த ஓவரில் அப்படியே மேட்ச் மாறியது. இதன் பின் கடைசி ஓவரில் திவாதியாவும் சிக்ஸ் அடிக்க, குஜராத் அணி எளிமையாக வென்றது.

பவுலிங்
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணியால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. அணியில் துஷார் தேஷ்பாண்டே இம்பாக்ட் வீரராக எடுக்கப்பட்டார். இவர் 1 விக்கெட் எடுத்தாலும் 50+ ரன்களை கொடுத்து தோல்விக்கு காரணமாக இருந்தார். இவருக்கு பதில் ஆகாஷ் சிங்கை இம்பாக்ட் வீரராக எடுத்திருந்தால் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். முகேஷ் சவுத்திரிக்கு மாற்றாக தற்போது 19 வயதே நிரம்பிய ஆகாஷ் சிங்கை சிஎஸ்கே அணி மாற்று வீரராக எடுத்து உள்ளது. சிஎஸ்கே வலை பயிற்சியில் பவுலிங் செய்து வந்தவர் 15 பேர் கொண்ட அணியில் சேர்ந்துள்ளார்.

யார் இவர்?
இவர் இடதுகை சீம் பவுலர். முக்கியமாக இன் ஸ்விங் போட கூடியவர் . 140 கிலோ மீட்டருக்கும் வேகமாக அவ்வப்போது போடுவார். அதற்கெல்லாம் மேலே இவர் கடைசி ஓவர்களில் துல்லியமாக யார்க்கர் வீச கூடியவர். ராஜஸ்தான் மாநில அணிக்காகவும், நாகலாந்து மாநில அணிக்காகவும் இவர் சிறப்பாக ஆடி இருக்கிறார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் ஆடி உள்ளார். அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக 2020ல் ஆடி கவனம் பெற்றார்.

களமிறக்க வேண்டும்
இவரின் பலமே டெத் ஓவர்களில் யார்க்கர் வீசுவது. அதேபோல் இன் ஸ்விங் செய்வது. 9 முதல் தர போட்டிகளில் இவர் 31 விக்கெட் எடுத்துள்ளார். அதாவது மேட்ச்சிற்கு 3 விக்கெட் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணி இவரை தற்போது 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்து உள்ளது. சிஎஸ்கே அணிக்கு தற்போது லெப்ட் ஆர்ம் சீம் பவுலர் இல்லை. அந்த குறையை இவர் போக்குவார். முக்கியமாக இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்வார், யார்க்கர் போடுவார் என்பதால் தோனி கண்டிப்பாக இவரை களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications