நீங்களும் வருவீங்களா? கிரிஸ் ஸ்ரீகாந்தை பார்த்ததும்.. மீட்டிங்கில் பட்டென கேட்ட தோனி.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியில் பவுலிங்கை மட்டும் மாற்ற வேண்டும் என்று ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் சமீபத்தில் ஸ்ரீகாந்தை தோனி நேரில் சந்தித்தார்.

2023 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 2023 தொடரில் சிஎஸ்கே அணி தீவிரமாக ஆடிக்கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே, இரண்டாவது போட்டியில் லக்னோவிற்கு எதிராக வென்றது.

சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & டபிள்யூ), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர் ஆகியோர் ஆடி வருகின்றனர்.

 IPL 2023 CSK: What did Kris Srikanth tell to Chennai Super Kings skipper Dhoni?

குஜராத் அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இரண்டாவது போட்டியில் வென்றது.

சிஎஸ்கே அணிக்கு பொதுவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிவுரை கூறுவது வழக்கம். அதாவது சிஎஸ்கே எப்படி இருக்க வேண்டும், சிஎஸ்கே அணி எப்படி ஆட வேண்டும் என்று அறிவுரை சொல்வது வழக்கம். 2020 சீரியஸை சிஎஸ்கே மிக மோசமாக ஆடியது. அந்த வருடம் சிஎஸ்கே மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த வருடம் சிஎஸ்கேவிற்கு கடுமையான அறிவுரைகளை கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வருடமும் சிஎஸ்கே அணியின் பவுலிங்கை மாற்ற வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீகாந்தும் இதே அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்காக தற்போது சிஎஸ்கே அணி பயிற்சி பெற்று வருகிறது. இதையடுத்து சிஎஸ்கே கேப்டன் தோனியை சமீபத்தில் ஸ்ரீகாந்த் சந்தித்தார். அவர்கள் பின்வருமாறு உரையாடிக்கொண்டனர் .

 IPL 2023 CSK: What did Kris Srikanth tell to Chennai Super Kings skipper Dhoni?

ஸ்ரீகாந்த் தோனியை பார்த்து: உங்களுக்கு சல்யூட் பாஸ்.

தோனி: எங்களுடன் பஸ்ஸில் நீங்களும் வரப்போகிறீர்களா என்ன?

ஸ்ரீகாந்த்: இல்லை நான் இப்போது கமெண்ட்ரி செய்ய போகிறேன். நீங்கள் பேட்டிங் செய்த போது நான் கமெண்ட்ரி செய்தேன். சிறப்பாக இருந்தது. மிக சிறப்பாக இருந்தது. உங்களை நினைத்து நான் சந்தோசம் அடைகிறேன். உங்களுக்கு எப்பேதும் கடவுளின் அருள் இருக்கட்டும், என்று தோனியிடம் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டு உள்ளார். இவர்கள் பேசிக்கொண்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சீசனில் சிஎஸ்கே மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக உள்ளது. சிஎஸ்கே அணியில் 11 வீரர்களும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியில் இருக்கும் மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மூன்று பேருமே நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர்கள்.

ஆனால் சிஎஸ்கே அணியில் பவுலிங் மோசமாக உள்ளது. இந்த 2023 ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் காயத்திற்கு பின் மீண்டும் வந்துவிட்டார். ஆனால் இன்னும் அவர் முழுமையான ரிதத்திற்கு திரும்பவில்லை. அதேபோல் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராத பென் ஸ்டோக்ஸ் இன்னும் சரியாக பவுலிங் போட முடியாமல் உள்ளார். இவர்கள் போக துஷார் தேஷ் பாண்டே, ராஜவர்தன் ஹங்கிரேக்கர் ஆகிய இருவரும்தான் பவுலிங் செய்கின்றனர். ஆனால் அவர்களிலும் ராஜ்வர்தன் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். முக்கியமாக சிஎஸ்கே அணியில் கடந்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி பவுலர்கள் 16 வைட் பந்துகளை போட்டுள்ளனர்.

லக்னோவிற்கு எதிராக மட்டும் 12 பந்துகளை போட்டு உள்ளனர். அதேபோல் 5 நோ பந்துகளை போட்டு உள்ளனர். அதில் 3 லக்னோவிற்கு எதிராக போடப்பட்ட பந்துகள் ஆகும். சிஎஸ்கே அணியில் பவுலிங்கை மட்டும் மாற்ற வேண்டும் என்று ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் அறிவுரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+