பவர் பிளே தாண்டுவ நீ?.. 3 காரணங்கள்.. 1 சிஎஸ்கே வீரர்.. தோனி இப்பவே சுதாரிக்கணும்.. என்னாச்சு?
சென்னை: சிஎஸ்கே ஸ்கிப்பர் தோனிக்கு முக்கியமான அறிவுரை ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
சிஎஸ்கே ராஜஸ்தான் இடையே இன்று சென்னையில் மேட்ச் நடக்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
2023 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி லக்னோவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ருத்துராஜ் இந்த மேட்சிலும் அதே வேகத்தில் அடித்து ஆடினார். 31 பந்துகள் பிடித்தவர் 3 பவுண்டரி , 4 சிக்ஸர் அடித்தார். 57 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். அதோடு ஒன் டவுனில் மொயின் அலியை தோனி களமிறக்காமல் துபேவை களமிறக்கினார்.
புதிய பந்தில் கொஞ்சம் நன்றாக ஆட கூடிய துபே ஒன் டவுன் இறங்கியது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியது. தோனியின் இந்த முடிவு சிஎஸ்கேவிற்கு உதவியது. வெறும் 16 பந்துகளில் 3 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 27 ரன்கள் எடுத்தார். பின்னர் மொயின் அலி 19, அம்பதி ராயுடு 27 ரன்கள் எடுத்தனர். தோனி கடைசியில் வந்து 3 பந்தில் 2 சிக்ஸ் அடித்து 12 ரன்கள் எடுத்தார்.
இதனால் சிஎஸ்கே அணி 217-7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோவில் கே எல் ராகுல் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கைலி மையர்ஸ் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்து 22 பந்தில் 53 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். பின்னர் ஸ்டோனிஸ், க்ருனால், ஹூடா வரிசையாக சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிஎஸ்கே எளிதாக வென்றது .
இதையடுத்து மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வென்றது. மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்ட்னர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
சான்ட்னர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.

டெவோன் கான்வே: இந்த 3 போட்டிகளில் 2 போட்டியில் டெவோன் கான்வே மோசமாக சொதப்பினார். லக்னோவிற்கு எதிராக அரை சதம் அடித்த டெவோன் கான்வாய், குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக சொதப்பி அவுட் ஆனார். பவர் பிளே தாண்டுவ நீ? என்று கிண்டல் செய்யும் அளவிற்கு பவர் பிளேவிலேயே மோசமாக சொதப்பி அவுட் ஆனார்.
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் ஆட வேண்டும் என்று தோனிக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. டெவோன் கான்வாய் மிடில் ஆர்டரில் இறங்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணிக்கு அதி பெரிய சப்போர்ட்டாக இருக்கும்.
இதற்கான 3 காரணங்களும் அடுக்கப்பட்டு உள்ளன.
காரணம் 1 - டெவோன் கான்வே ஒரு டெக்கினிக்கல் ரீதியாக ருத்துராஜுக்கு சிறந்த பார்ட்னர் கிடையாது.
டு பிளசிஸ் போல டெக்கினிக்கல் ரீதியாக ருத்துராஜுக்கு கான்வே உதவில்லை. இரண்டு பேருமே தொடக்கத்தில் கொஞ்சம் டைம் எடுத்து ஆடும் வீரர்கள். அதோடு இரண்டு பேருமே ஒரே மாதிரி டெக்னிக் கொண்டவர்கள். ஆனால் ருத்துராஜ் சரியாக ஆட வேண்டும் என்றால் அவரின் பிரஷரை குறைக்கும் வகையில் எதிரில் உள்ளவர் வேகமாக ஆட வேண்டும்.
ஆனால் கான்வே ருத்துவை விட மெதுவாக ஆடுகிறார். இதனால்தான் இவர்கள் பார்ட்னர்ஷிப் இதுவரை செட்டாகவில்லை.

காரணம் 2 - பென் ஸ்டோக்ஸ்: இந்த சீசனில் மட்டுமின்றி கடந்த சீசனிலும் பவர் பிளேவில் சிஎஸ்கே மெதுவாகவே ஆடியது. இதை சரி செய்ய பவர் பிளேவில் அடித்து ஆடும் வீரர்களை கான்வேவிற்கு பதிலாக கொண்டு வர வேண்டும். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகிய இருவரில் ஒருவர் ருத்துவுடன் ஓப்பனிங் இறக்க வேண்டும்.
ஸ்டோக்ஸ் பவர்பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில்திறமையானவர். கான்வே மற்றும் கெய்க்வாட் போன்ற ஸ்விங்கிற்கு அவர் பயப்படும் வீரரும் இல்லை என்பதால் அவர் நல்ல உதவியாக இருப்பார்.
காரணம் 3 - கான்வே - ஸ்பின்: கான்வே நன்றாக ஸ்பின் ஆடுவார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள கான்வே நல்ல வீரராக இருப்பார். இதனால் அவரை மிடில் ஆர்டரில் 4வது இடத்தில் இறக்கலாம். இவர் மிடிலில் இறங்கும் தோனி போன்ற ஸ்பின்னில் திணறும் வீரர்களுக்கு உதவியாக இருப்பார்.












Click it and Unblock the Notifications