சுளீர்ன்னு பட்டு இருக்கும்.. தீபக் சாகர் கன்னத்தில் அறைய போன தோனி.. வெளியான வீடியோ.. என்ன நடந்தது?
சென்னை: சிஎஸ்கே பவுலர் தீபக் சாகர் கன்னத்தில் தோனி அறையப்போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2023 ஐபிஎல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 4ம் இடத்தில் உள்ளது.
இதுவரை 11 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. 6 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு சேர்க்கப்பட்டு இருக்கிறார். இம்பாக்ட் வீரராக அணிக்குள் துபே இறக்கப்பட்டு உள்ளார். சிஎஸ்கே அணியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, பதிரனா, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & விக்கெட்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த நிலையில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் கொஞ்சம் திணறி வருகிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. பவுலிங் செய்ய வசதியாக பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்தது.
இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் இன்னும் ஸ்லோ ஆகும். அதோடு ஸ்பின் போடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை எடுத்துவிட்டு, டெல்லி அணியை சேஸ் செய்ய வைக்க தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
ஓப்பனிங் இறங்கிய கெய்க்வாட் 18 பந்தில் 4 பவுண்டரி அடித்தார். 24 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். 13 பந்தில் கான்வே 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். 12 பந்துகள் பிடித்த மொயின் அலி வெறும் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ரஹானேவும் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
சிஎஸ்கே அணி இப்போது வரை 14.2 ஓவரில் 113-5 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

தோனி :இந்த நிலையில்தான் போட்டிக்கு முன்பாக வாரம் அப் செய்யும் போது சிஎஸ்கே பவுலர் தீபக் சாகர் கன்னத்தில் தோனி அறையப்போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தோனி சாகரை சீரியஸாக கன்னத்தில் அறைய செல்லவில்லை. அவர் விளையாட்டாகவே இப்படி அறைய சென்றார். ஆனால் தோனி அப்படி செய்த போது கிட்டத்தட்ட சாகர் கன்னத்தில் படும்படி சென்றது.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த சீசனில் சாகர் சரியாக ஆடவில்லை. பெரும்பாலான போட்டிகளில் தொடக்கத்தில் அவர் காயம் காரணமாக ஆடவில்லை.
அதன்பின் அணிக்கு வந்தும் கூட அவரின் பவுலிங் இன்னும் முழு பார்மிற்கு வரவில்லை.












Click it and Unblock the Notifications