தோனி டீமின் மேஜிக்குகள்.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. நம்பாட்டினாலும் அதுதான் நிஜம்!
சென்னை: எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் தற்போது ஐபிஎல் அணிகளிலேயே அதிக வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 7 போட்டிகளில் விளையாடி இதுவரை 5 வெற்றிகள் பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இதில் என்ன சிறப்பு.. தோனி டீம் சிறப்பாக விளையாடுது, ஜெயிக்குது என்கிறீர்களா.. அது உண்மை தான். ஆனால் அதன் பின்னால் உள்ள ஒரு மேஜிக் எம்எஸ் தோனி தான். சச்சினுக்கு பிறகு மிகவும் செல்வாக்கு பெற்ற ஒரு கிரிக்கெட் நட்சத்திரம் என்றால், அது எம்எஸ் தோனி. அவர் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்று கொடுத்தார் என்பதால் மட்டுமல்ல.. ஐபிஎல், டி20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என எல்லா வகை போட்டியிலும் தோனியின் மேஜிக் ஜெயித்தது.

வெற்றிகரமான கேப்டனாக அணியை திறம்பட வழிநடத்தியதுடன், ஆபத்தான நேரங்களில் இந்திய அணியை பலமுறை வெற்றி பெற வைத்தவர். சரி போதும் தோனி புராணம். சிஎஸ்கே அணி கேப்டனாக இப்போது அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை ரசிகர்களின் பார்வையில் பார்ப்போம்.
எப்பவுமே தோனிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறார்.இந்த முறை மஹிஷா பதிரானா,ஆகாஷ் சிங், தீட்ஷனா போன்ற வீரர்களை உருவாக்கி பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க வைக்கிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஆம் ரசிகர்களின் கருத்து உண்மை தான். தோனி ஒவ்வொரு வீரரையும் பட்டை தீட்டிய வைரமாக மாற்றுவதற்கு மெனக்கெடுவதை நீங்கள் போட்டிகளில் நேரடியாகவே பார்க்க முடியும்.
உதாரணமாக நேற்று நடந்த கொல்கத்தா உடனான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் பவுலர் மதீஷ் பதிரானாவிடம் நடந்து கொண்ட விதமே சாட்சி. இந்த போட்டி முழுக்க பதிரானா வீசிய 4 ஓவர்களில் அவரிடம் தோனி அன்பாக நடந்து கொண்டு வழி நடத்தினார். நண்பர் போல தோளில் கை போட்டு ஆலோசனை செய்து வழி நடத்தினார். டெத் ஓவர்களில் எப்படி வீச வேண்டும் என்று இரண்டு பாலுக்கு ஒருமுறை அருகில் சென்று ஆலோசனை வழங்கினார். ஆசிரியர் மாணவனுக்கு சொல்லிக்கொடுப்பது போல் சொல்லிக்கொடுத்தார் தோனி. இது ஒரு சின்ன உதாரணம் தான். இதுதான் தோனியின் வெற்றிக்கு காரணம்.
வெற்றிகரமான தலைவன் என்பவன். தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கூறி வழிநடத்தி அவர்களை பெரிய தகுதி உடையவர்களாக மாற்ற வேண்டும். தேவைப்பட்டால் அவரே களத்தில் இறங்கி வெற்றி பெற வைக்க வேண்டும். அதேபோல் உணர்ச்சி வயப்படாமல் சரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த குணம் தோனிக்கு கைவந்த கலையாக உள்ளதால் வெற்றி பெறுகிறார். அவரது அணியும் வெற்றி பெறுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயத்தை எஸ்கேபி கருணா என்பவர் ட்விட்டரில் கூறியுள்ளார். அதை அப்படியே பார்ப்போம். "பாதி ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டன. இப்போதைய நிலையில் சிஎஸ்கே தான் டாப்பில் இருக்கிறது. ஆனால் உண்மையில் முதல் மேட்ச் தொடங்கும் முன்பு சிஎஸ்கே அணியில் எனக்கு தெரிந்து சொல்லிக்கொள்ளும்படியான பிரபலமான ஒரு வேகப்பந்து வீச்சாளரும் இல்லை. சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிக விலை கொடுத்து வாங்கிய ஒரே ஒரு ஸ்டார் ப்ளேயருக்கு உடல்தகுதி இல்லை.
சிஎஸ்கேவின் ரெண்டு ஸ்பின்னரும் ஃபார்மில் இல்லை. சிஎஸ்கே அணியில் விளையாடுபவர்களில் இரண்டு பேரை தவிர ஒருவர் கூட தற்சமயம் எந்த நாட்டு தேசிய அணியிலும் விளையாடுபவர்கள் இல்லை. நடு வரிசை பேட்ஸ்மேன்களோ பணி ஓய்வு நீட்டிப்பில் போய் கொண்டு இருக்கிறார்கள். இந்த அணியை வச்சுகிட்டு Table Top லே இருப்பது ஏதோ நம்ப இயலாத மேஜிக் போல இருக்கிறது! வெறும் 50 லட்சத்துக்கு வாங்கிய ப்ளேயர் 20 கோடி ஆட்டக்காரனுக்கான output தருவது வியப்பிலும் வியப்பு! ஜேம்ஸ் கேமரூனும், ராஜமவுலியும் கூட உருவாக்க முடியாத ஹீரோயிசம் இந்த தோனியிஸம்" என்று கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சிஎஸ்கேவில் பார்ஸ்ட் பவுலிங் சுமாராகத்தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த மேட்ச்களில் சிஎஸ்கே வேகபந்து வீச்சு ஃபார்முக்கு மாறி உள்ளது. வெறும் 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டே இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 16 கோடிக்கு ஏலத்தில ஆல் ரவுண்டர் ரவீந்தர் ஜடேஜா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பவுலிங் மட்டுமல்ல பேட்டிங்கிலும் கலக்கி உள்ளது சிஎஸ்கே டீம். தேவன் கண்வே, ருத்ராஜ், ரஹானே, சிவம் துபே ஆகியோர் அதிக ரன்களை குவித்துள்ளனர். எம்எஸ் தோனியின் சிஎஸ்கே டீம் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.இந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதால் கோப்பையை எப்படியும் வென்றுவிடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் பலமாக நம்புகிறார்கள்.
-
"ரூ.25 கோடி கொடுக்க வேண்டாம்.. நீ ஊருக்கு கிளம்பு" கேகேஆர் அணியை குஜிலி மஸ்த் செய்த சிஎஸ்கே மீம்ஸ்! -
CSK Memes: மேலே ஏறி வாரோம், ஒதுங்கி நில்லு.. மும்பை இந்தியன்சை கலாய்க்கும் சிஎஸ்கேயன்ஸ்.. தெறிக்கும் மீம்ஸ்கள் -
Sanju Samson: 148.2 கிமீ வேகம்.. இதுதான் கம்பேக்.. சஞ்சு சாம்சனை மிரட்டிவிட்ட கார்த்திக் தியாகி! -
ஸ்ரேயாஸ் ஐயர் அருமை இப்போ தெரியுதா.. முதல் வெற்றியை கூட பெற முடியலை.. புலம்பும் கேகேஆர் அணி! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications