இதுதான் பெரிய சிக்கல்.. ஜாக்கிரதை! வாயை திறந்துட்டாரே! தோனிக்கு வார்னிங் அளித்த சஞ்சய் மஞ்சிரேக்கர்
சென்னை: சிஎஸ்கே அணிக்கு பிரபல கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் முக்கியமான சில எச்சரிக்கைகளை விடுத்து உள்ளார்.
சிஎஸ்கே குஜராத் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி மாலை கோலாகலமாக துவங்க உள்ளது.
கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணி 9வது இடம் பிடித்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி முதலில் சில போட்டிகளை ஜடேஜா கேப்டன்சியில் ஆடியது. மொத்த சீசனில் வெறும் 4 போட்டிகளை மட்டுமே சிஎஸ்கே வென்ற நிலையில் மோசமாக ஆடி வெளியேறியது. இந்த நிலையில்தான் இன்று நடக்கும் போட்டியை வெற்றியோடு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சிஎஸ்கே
சிஎஸ்கே அணியில் இந்த முறை பிராவோ கிடையாது. அதேபோல் பல இளம் வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளதால் அணியின் காம்பினேஷன் மாறும். சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள பென் ஸ்டோக்ஸ் பின்னர் இறங்குவார். இதில் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் போட வாய்ப்பு இல்லை. அவர் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே இறங்குவார். அவருக்கு காலில் காயம் உள்ளது. ஹர்திக் பாண்டியா எப்படி இரண்டு பவுலிங் செய்யவில்லையோ அதேபோல் இவரும் பவுலிங் செய்யாமல் பேட்டிங் மட்டும் செய்வார். அவரின் பவுலிங்கை சிஎஸ்கே அணி கண்டிப்பாக மிஸ் செய்யும்.

மிஸ் செய்யும்
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு பிரபல கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் முக்கியமான சில எச்சரிக்கைகளை விடுத்து உள்ளார். அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சிஎஸ்கே அணி பலமாகவே இருக்கிறது. ஆனால் அவர்களின் பவுலிங் குறித்து மட்டுமே எங்களுக்கு கேள்விகள் உள்ளது. சிஎஸ்கே அணியில் டிவைன் பிரிட்டோரியஸ் இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்திய மண்ணில் பெரிய அனுபவம் இல்லை.

ஐபிஎல்
முக்கியமாக ஐபிஎல் போட்டிகளில் பெரிய அனுபவம் இல்லை. இதனால் அவர்களுக்கு கடந்த வருடம் சிக்கல் இருந்தது. தற்போது பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு பவுலிங்கில் இதனால் பிரச்சனை ஏற்படலாம். முக்கியமாக டெத் பவுலிங்கில் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனை ஏற்படலாம். சிஎஸ்கே அணி இந்த தொடரில் பாதி போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடுகிறது. அதனால் அந்த அணிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறது.

ஸ்லோ பிட்ச்
ஸ்லோ பிட்ச் கொண்ட மைதானங்களில் தோனியின் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருக்கும். சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் வெற்றிபெற காரணம் அவர்களின் சிறப்பான கேப்டன்சிதான். ஒரு சீசனில் அவர்கள் மோசமாக ஆடினால், அடுத்த சீசனில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள். மீண்டும் அவர்கள் கோப்பையை வெல்லுவார்கள். கடந்த சீசனில் மோசமாக ஆடிய சிஎஸ்கே இந்த சீசனில் சிறப்பாக ஆடுவதற்கான பயிற்சிகளை எடுக்கும்.

என்ன சொன்னார்?
ப்ளே ஆப் செல்ல வாய்ப்புள்ள அணிகளில் சிஎஸ்கே ஒரு அணி என்று நான் கருதுகிறேன். சிஎஸ்கே அணியில் தீபக் சாகர் 2 கடைசியில் ஓவர்களை வீசுவார். அதாவது டெத் ஓவர்களை வீசுவார். அவர் புதிய பந்தில் நன்றாக வீசினால் கடைசியில் டெத் ஓவர்களில் அவருக்கு பவுலிங் கொடுப்பார். அதை தவிர்த்து பிரிட்டோரியஸ் வீசும் வாய்ப்புகள் உள்ளது. மகேஷ் தீக்சனா முதல் போட்டியில் ஆட வாய்ப்பு உள்ளது. அவர் இருந்திருந்தால் முதல் மேட்சில் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். அவர் இன்றி சிஎஸ்கே இன்று சமாளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications