ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூர் அணி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! சிஎஸ்கே குறித்தும் பதிவு
சென்னை: பெங்களூர் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கோப்பை வென்ற பெங்களூர் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த தருணத்திற்காக காத்திருந்த விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், அடுத்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி முழு பலத்துடன் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையே வெல்லாத அணியாக இருந்த பெங்களூர் அணி, முதல் முறையாக தனது கோப்பை கனவை நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெங்களூர் அணி வெற்றியை ருசித்துள்ளது.

பெங்களூர் அணி கோப்பை வென்ற நிலையில், ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர். கோப்பை வென்றுள்ள பெங்களூர் அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்சிபி அணிக்கும், விராட் கோலிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து பதிவில், "கோப்பை வென்ற பெங்களூர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்திற்காக காத்திருந்த விராட் கோலிக்கு வாழ்த்து. அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முழு பலத்துடன் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பெங்களூர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
எதிராளியாக வந்து என் சகோதரனானவர்! வில்லியம்சன் ஓய்வுக்கு விராட் கோலி உருகி எழுதிய எமோஷனல் கடிதம் -
வெறும் 61 இன்னிங்ஸ் தான்.. சுப்மன் கில்னா சும்மாவா.. விராட் கோலி சாதனையை சரித்த பிரின்ஸ்! -
முற்றுப்புள்ளி வைத்த ‘ஜென்டில்மேன்’! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?









Click it and Unblock the Notifications