அந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்கடா.. சத்தமின்றி ஐபிஎல் உலகில் "பதான்" புரட்சி.. மலைத்து போன பிசிசிஐ!
சென்னை: ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சத்தமே இன்றி மாபெரும் புரட்சி ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார். பிசிசிஐ அமைப்பு இவரின் கொஞ்சம் மலைத்து போய் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
Recommended Video
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தற்போது வர்ணனையாளர் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். கிரிக்கெட் விமர்சகராகவும் இருக்கிறார். இந்திய அணியில் ஒரு காலத்தில் முக்கியமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் பவுலராக இருந்தார்.
அதன்பின் ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே உட்பட பல அணிகளுக்கு நன்றாக ஆடினார். தற்போது பல்வேறு ஐபிஎல் அணிகளுக்கு இர்பான் பதான் ஆலோசனை வழங்கி வருகிறார். அதோடு புதிய இளம் வீரர்களை தேர்வு செய்வதிலும் இவர் முக்கிய பங்கு ஆற்றி வருகிறார்.

எப்படி
இர்பான் பதான் சத்தமே இன்றி இந்திய ஐபிஎல் உலகிற்கு பல திறமையான வீரர்களை அடையாளம் காட்டிக்கொண்டு வருகிறார். ஒரு குறிப்பிட்ட அணிக்கு என்று இல்லாமல் பல்வேறு அணிகளுக்கு இவர் திறமையான வீரர்களை பரிந்துரை செய்து வருகிறார். முக்கியமாக ஹைதராபாத் அணியின் டேலண்ட் ஸ்கவுட் பணிகளை மேற்கொண்டு வரும் இர்பான் பதான் பல முக்கியமான இளம் வீரர்களை ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தி உள்ளார்.

2013
2013ல் முதலில் ஹர்திக் பாண்டியாவை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். அப்போதே ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல் ரவுண்டராக் வருவார் என்று கணித்தார். அதோடு ஹைதராபாத் அணியில் இவரை எடுக்க வேண்டும் என்று லட்சுமணனுக்கு பரிந்துரையும் செய்தார். ஆனால் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை எடுத்தது. அதோடு பாண்டியாவும் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

தற்போது
இந்த நிலையில்தான் தற்போது உம்ரான் மாலிக் என்ற ஜம்மு காஷ்மீர் வீரரை அடையாளம் கண்டு ஹைதராபாத்தை அணிக்கு பரிந்துரை செய்தார். நடராஜனுக்கு மாற்று வீரராக வந்த உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார். நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக இவர் பவுலிங் தாண்டவம் ஆடினார். 21 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார். பொதுவாக ஷார்ட் பந்துகளை இவ்வளவு வேகத்தில் வீச முடியாது. ஆனால் உம்ரான் அதையும் கூட 153 கிமீ வேகத்தில் வீசினார்.

இர்பான்
காஷ்மீரில் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இவரை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் இர்பான் பதான் வழங்கினார். அதோடு காஷ்மீரில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு களம் அமைக்க வேண்டும் என்று இர்பான் பதான் கூறினார். ஹைதராபாத்தின் இன்னொரு வீரர் அப்துல் சமாத்தையும் காஷ்மீரில் இருந்து இவர்தான் ஐபிஎல்லுக்கு கொண்டு வந்தார்.

இர்பான் பதான் அறிவுரை
இர்பான் பதான் அறிவுரை காரணமாகவே ஹைதராபாத் அணியில் சமாத் எடுக்கப்பட்டார். தற்போது ஹைதராபாத் அணியின் மிக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரராக சமாத் இருக்கிறார். இதெல்லாம் போக மும்பை அணியில் வலைப்பயிற்சியில் கவனிக்கப்பட்டு வரும் ரஷீக் ஸலாம் என்ற வீரருக்கும் இர்பான்தான் பயிற்சி அளித்தது. இவரும் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து கொண்டு இருக்கிறார்.

ஆடுவார்
விரைவில் மும்பை அணியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட அடையாளமே தெரியாத பல சிறப்பான திறமையான வீரர்களை இர்பான் பதான் அடையாளம் கண்டு ஐபிஎல் உலகிற்கு கொண்டு வந்துள்ளார். இர்பான் பதானின் இந்த நடவடிக்கைகளை பிசிசிஐ நிர்வாகிகள், பல முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ரசிகர்கள் கோரிக்கை
அதேபோல் ரசிகர்களும் பிசிசிஐ இவருக்கு பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்க தொடங்கி உள்ளனர். அந்த செல்லத்தை அப்படியே தூக்கிட்டு வந்த இந்திய அணியில் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின் மொத்தமாக பயிற்சியாளர் குழு மாற உள்ளதால் இர்பான் பதானை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications