காத்திருப்பு லிஸ்டில் இருந்த "ஐபிஎஸ் லட்சுமி".. லஞ்ச ஒழிப்பு துணை இயக்குனராக நியமனம்.. யார் இவர்?
சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனாராக டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி நியமனம் செய்யப்பட்டார். குஜராத்தில் இவர் அதிகாரியாக இருந்த போது, அப்போது அமித் ஷாவையே கைது செய்தவர். இவரின் நியமனத்தின் போதே லஞ்ச ஒழிப்புத்துறை அதிக கவனம் பெற்றது.
இந்த நிலையில்தான் அதன் துணை இயக்குனர் பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்.

காத்திருப்பு
சென்னை மாநகர தெற்கு மண்டல இணை கமிஷனர் பதவியில் இருந்த ஐபிஎஸ் லட்சுமி சொந்த காரணங்கள் காரணமாக விடுமுறையில் இருந்தார். இந்த விடுமுறையை தொடர்ந்து இவர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆட்சியில் பல்வேறு முறை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

பொறுப்பு
பெரிய பதவி எதுவும் வழங்கப்படாமல் தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் இவர் இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திடீரென விருப்ப ஓய்வு கேட்டு இருந்தார். 2033ல்தான் இவர் ஓய்வு பெற வேண்டும் என்றாலும், திடீரென விருப்ப ஓய்வு கேட்டார். இவர் ஏன் விருப்ப ஓய்வில் செல்ல முடிவு எடுத்தார் என்பதற்கான தகவல்கள் வெளியாகவில்லை. ஐபிஎஸ் வட்டாரத்தில் இது பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

மாற்றம்
இந்த நிலையில்தான் திடீரென தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவி ஏற்றார். பல்வேறு மாற்றங்களில் பல்வேறு பொறுப்புகளில் பதவிகளை வகித்து இருக்கிறார். எஸ்பியாக புரோமோஷன் பெற்றவர், பின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

சென்னை
அதன்பின் சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக பதவியில் நியமிக்கப்பட்டார். ஆனால் அதை தொடர்ந்து தனிப்பட்ட விடுப்பு, கட்டாய காத்திருப்பு பட்டியல் என்று இவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திடீரென தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications