உலக அரசியலில் முக்கிய சம்பவம்! கைகோர்த்த பரம வைரிகள்! ஈரான் -சவுதி கூட்டு பயிற்சி! இஸ்ரேலுக்கு செக்
சென்னை: செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அந்த மொத்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது இஸ்ரேலுக்கு பெரிய அளவில் நெருக்கடியை கொடுக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் சீனா மேற்கொண்ட மாற்றத்தால் தற்போது இஸ்ரேல், அமெரிக்கா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன. முக்கியமாக ஈரான் - சவுதி ஒன்று சேர்ந்தது இஸ்ரேல், அமெரிக்காவை உலுக்கி உள்ளது.
பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
உறவு மேம்பாடு: பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.
ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து ப்ராக்சி வார் செய்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது. பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் - சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 7 வருடங்களுக்கு முன் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக தங்கள் உறவை முறித்துக்கொண்டன. சவுதி அரேபியா மூலம் ஷியா தலைவர் நிமிர் அல் நிமிர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஈரானில் இருந்த சவுதி அரேபியா ராஜாங்க ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இந்த மோதலால் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக உறவை முறித்துக்கொண்டன. இந்த நிலையில் இவர்களுக்கு இடையிலான மோதல் என்பது சவுதி அரேபியாவில் ராஜாங்க ரீதியாக பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இரண்டு நாடுகளும் பல்வேறு பிராக்சி போர்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. சீனா இவர்களுக்கு இடையில் மத்தியச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications