"Fattah 1".. முதல்முறை ராட்சசனை அவிழ்த்துவிட்ட ஈரான்.. நொறுங்கிய இஸ்ரேல்.. நடுங்கிப்போன அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் வரப்போகிறது.. சிங்கம் வரப்போகிறது என்று அச்சமூட்டி.. கடைசியில் சிங்கம் வரவில்லை என்றதும் இனி சிங்கமே வராது என்று ஆசுவாசம் அடையும் நேரத்தில் சிங்கம் வந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஈரானின் நேற்றைய தாக்குதல் அமைந்துள்ளது. இத்தனை நாட்கள் ஈரான் அமைதியாக இருந்தது.. ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை வைத்து proxy war.. அதாவது நேரடியாக போர் நடத்தாமல் மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வந்தது. இப்போதுதான் மிகப்பெரிய அளவில் இஸ்ரேலை நேரடியாக ஈரான் தாக்கி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால் இப்போது நடத்தும் அளவிற்கு மிகப்பெரிய.. மிக மோசமான தாக்குதலை இதுவரை ஈரான் நடத்தியதே இல்லை. இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஒரு மாதமாக ஹிஸ்புல்லா இயக்கத்தை கதி கலங்க வைத்து வருகிறது இஸ்ரேல். சமீபத்தில்தான் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

iran israel palestine

இப்படிப்பட்ட நிலையில்.. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். .

பதிலடி: இது போக லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. ஈரானை இஸ்ரேல் கலங்கடித்து உள்ளது.

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.. "Fattah 1 மற்றும் 2" ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி உள்ளது. முதல்முறையாக இந்த இரண்டு ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி உள்ளது.

ஃபத்தாஹ் 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. . இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையாகும். அதன் அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி.. இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது.

ஃபத்தாஹ் என்ற.. அதன் பெயர், அரேபிய மொழியில் "வெற்றி கொண்டவர்" அல்லது "வெற்றியைக் கொண்டுவருபவர்", "வெற்றியாளர்" என்று பொருள்படும். இதன் மாடல் இரண்டு அதாவது ஃபத்தாஹ் 2 கடந்த நவம்பரில் கொண்டு வரப்பட்டது. 350-450 kg எடை கொண்டது இது. 1400 கிலோ மீட்டர் பயணித்து தக்க கூடியது. ஒலியின் வேகத்தை விட 13 மடங்கு அதிக வேகத்தில் இது செல்ல கூடியது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு ஆயுதமாகும், இது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு வேகத்தில் செல்லும். இல்லையென்றால் 1 to 5 மைல்கல் நொடிக்கு போகக்கூடிய (1.6 to 8.0 km/s) வேகத்தில் செல்லும். இதன் வேகத்தை மேக் 5 என்றும் கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+