ஐஆர்சிடிசி 20 லட்சம் புக்கிங் சாதனை.. மறுபக்கம் ரயில் பயணிகளை பாடாய்படுத்திய சர்வர்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: IRCTC ரெயில் டிக்கெட் முன்பதிவு பண்டிகை காலம் நெருங்க நெருங்க, பயங்கர வேகமெடுத்து வருகிறது. ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு புதிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், மற்றொருபக்கம் சர்வர் பிரச்சனை பாடாய் படுத்தியெடுத்து விடுகிறது.. இந்த 2 விதமான தகவல்களையும் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் முண்டியடிக்கும் நிலையில், டிக்கெட் புக்கிங் வசதியும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக IRCTC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC Tatkal Server

ஆனால், தட்கல் டிக்கெட் எடுக்க குறிப்பிட்ட நேரத்தில் இணையதளத்துக்குள் நுழைந்த பயணிகளுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடந்தது வேறு.. டிக்கெட் கிடைக்குமா என்ற பதற்றத்தில் அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

IRCTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சாதனை

IRCTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ந்தேதி ஒரே நாளில் 20 லட்சத்து 6 ஆயிரத்து 353 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஒரே நாளில் பதிவான 18 லட்சத்து 40 ஆயிரத்து 203 டிக்கெட்டுகளை விட அதிகமாகும். இதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 8-ந்தேதியும் 19 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்

தற்போது முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளில் சுமார் 89 சதவீதம் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பழைய சர்வர்களுக்கு பதிலாக புதிய சர்வர்கள் அமைக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவு அமைப்பின் திறன் ஏறக்குறைய இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. மேலும், புதிய பீட்டா இணையதள வசதி, ஆன்டி-பாட் மற்றும் CDN தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

இப்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் திறனை அதிகரித்துள்ளதாக IRCTC தெரிவித்து வரும் நிலையில், பண்டிகை காலங்களில் டிக்கெட் எடுக்க முயற்சிக்கும் பயணிகளுக்கு இணையதள சிக்கல் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதையொட்டி இந்திய ரெயில்வே சார்பில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பண்டிகை காலம் - விறுவிறு புக்கிங்

இந்த நிலையில், நேற்று காலை தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் குவிந்தனர். குறிப்பாக ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணியளவில் தொடங்கியதும், ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் இணையதளத்தை பயன்படுத்த முயன்றனர்.

இதனால் கடும் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. காலை 11 மணி முதல் 11.20 மணி வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பெரும்பாலான பயணிகளின் திரையில், "அதிகப்படியான நெரிசல் காரணமாக கோரிக்கையை செயல்படுத்த முடியவில்லை" என்ற தகவல் மட்டுமே தோன்றியது. இதனால் 20 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் தங்களது விவரங்களை உள்ளிடவும், கட்டணம் செலுத்தவும் முடியாமல் தவித்தனர்.

சர்வர் சிக்கல் - வெயிட்டிங் லிஸ்ட்

இணையதள சிக்கல் சரியாகி மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்குள் பெரும்பாலான ரெயில்களில் தட்கல் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து, வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு சென்றுவிட்டன. நீண்ட நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒவ்வொரு வருடமும் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதுபோன்ற நெட்வொர்க் சிக்கல் தொடர்வதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.. பண்டிகை காலங்களில் சர்வர் முடங்குவதைத் தவிர்க்கும் வகையில், அதன் திறனை மேலும் அதிகரித்து தடையற்ற டிக்கெட் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் IRCTC நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+