Irfan புளித்த பிரியாணி.. அழுகிய முட்டை. இர்பான் ரிவ்யூ செய்த ஹோட்டலுக்கு 2021 இல் சீல்.. பிளாஷ்பேக்
சென்னை: பிரபல யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு ரிவ்யூ செய்த ஹோட்டலில் கெட்டு போன இறைச்சியை பயன்படுத்தியதாக சீல் வைக்கப்பட்ட நிலையில் இவர் கடந்த ஆண்டும் ரிவ்யூ செய்த ஹோட்டலிலும் கெட்டு போன கறியை பயன்படுத்தியதால் ஹோட்டல் சீலிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
யூடியூபர்களில் பல விதம். அவருக்கு இருக்கும் ஆர்வத்திற்கேற்ப யூடியூப் சேனல்களை நடத்துவர். அந்த வகையில் இர்பான் என்பவர் Irfan's view எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதற்கு 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இவர் ஹோட்டல் ஹோட்டலாக போய் அங்கு உணவுகளை ருசி பார்த்துவிட்டு பின்னர் அந்த உணவின் ருசி, தரம் குறித்து பேசுவார். இதை கேட்டு அவரது சப்ஸ்கிரைபர்கள் தங்களது ஹோட்டலுக்கு போவார்கள்.

இர்பான் ரிவ்யூ
ஹோட்டல் நிர்வாகமும் இர்பான் ரிவ்யூ செய்ய அனைத்து வகையான உணவுகளையும் தருவார்கள். அதை சாப்பிட்டுவிட்டு ரிவ்யூ சொல்வதுதான் இர்பானின் வேலை. அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு சென்னை- தாம்பரம் சேலையூர் அருகே உள்ள காரைக்குடி உணவகத்திற்கு சென்றார்.

ஹோட்டல் ரிவ்யூ
அந்த ஹோட்டலில் இவர் ரிவ்யூ செய்து வழக்கம் போல் வேற லெவல், ஆஹா ஓஹோ என புகழ்ந்தார். இதை நம்பிய அவரது சப்ஸ்கிரைபர்கள், அந்த பக்கம் போகும் போது அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள். அந்த ஹோட்டலில் முந்தைய நாள் மிஞ்சி போன பிரியாணியை எடுத்து பிரீசரில் வைத்து அதை மறுநாள் சூடு செய்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது தெரியவந்தது.

சப்ஸ்கிரைபர்கள்
அந்த சப்ஸ்கிரைபர்களுக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் பிரியாணியில் சிக்கன் பீஸிலிருந்து துர்நாற்றம் வீசியதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவர்கள் அந்த ஹோட்டலில் வந்து ஆய்வு செய்த போது அங்கு பிரீசரில் ஒரு அண்டா முழுவதும் பிரியாணி இருந்தது தெரியவந்தது.

50 முட்டைகள்
மேலும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி போட்டு மேரிக்னேட் செய்யப்பட்ட இறைச்சிகளும் பிரீசரில் இருந்தன. அது போல் ஒரு நாளுக்கு முன் வேக வைத்த 50 முட்டைகளும் இருந்தது. இதையடுத்து கெட்டு போன 45 கிலோ பிரியாணி, தரமற்ற சிக்கன், மட்டன், மீன் இறைச்சிகளை வைத்து சமைத்து அதை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

காசுக்காக
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். இந்த ஹோட்டல் சாப்பாட்டை போய் நல்லாயிருக்குனு சொன்னீங்களே என இர்பானை திட்டி தீர்த்தனர். காசுக்காகவும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும் தரமற்ற ஓ்ட்டல் குறித்து வீடியோ போடுவதெல்லாம் தவறானது. இதை செய்யாதீர்கள் என எச்சரித்தனர்.

ஹோட்டலுக்கு சீல்
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னை அண்ணாநகரில் உள்ள ரோஸ் வாட்டர் ஹோட்டலில் உணவு ரிவ்யூ கொடுததார் இர்பான். இந்த ஹோட்டலிலும் 45 கிலோ அழுகிய நாற்றமடைய இறைச்சிகளை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ 5000 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications