கவுண்டமணி வழக்கில் நடந்த தில்லுமுல்லுகள்! வழக்கறிஞர் போட்டு உடைத்த உண்மை!
சென்னை: நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீட்க சட்டப்படி 20 ஆண்டுகள் வரை அவர் சட்டப்போராட்டம் நடத்தியது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதற்கான விளக்கத்தை அவரது வழக்கறிஞர் அளித்திருக்கிறார்.
நடிகர் கவுண்டமணியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையாகச் செல்வாக்குப் பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். குறிப்பாக இவரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இதுவரை அழிக்க முடியாத புகழைப் பெற்றுவிட்டன. அந்தளவுக்கு ஆழமாக ரசிகர்கள் மனதில் பதிந்தவர் கவுண்டமணி. அவர் தனது 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மீட்பதற்காகக் கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி, அதில் வெற்றி கண்டுள்ளார்.
ஒரு பிரபல நடிகராக இருந்தும் அவர் இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்து உரிய நீதியைப் பெற வேண்டி உள்ளது என சமூக வலைத்தளங்களில் சட்டம் பற்றிய புரிதலே இல்லாமல் பலர் கருத்து கூறி வருகின்றனர். அது குறித்து
கவுண்டமணியின் 20 ஆண்டுகால நண்பரும் வழக்கறிஞருமான சசிகுமார் ஒரு பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர் பல விஷயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது பற்றி சசி பேசுகையில், "கவுண்டமணி அவரது மனைவி சாந்தி ஆகியோர் மகள் ரமணி பாய் பெயரில் 1996-ல் இந்த இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் ஒரு வணிக வளாகம் கட்டுவதற்காக அபிராமி ஃபவுண்டேஷனுடன் 2001இல் ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். அந்த கட்டடத்தைக் கட்ட 3 கோடியே 58 லட்சத்திற்குக் கட்டி தருவதாக ஒப்பந்தம். உடனடியாக கவுண்டமணி 50% தொகையைக் கொடுத்துவிடுகிறார். உடனே கட்டிடம் கட்டுவதற்காக வேலைகள் தொடங்கிவிடுகிறது. அந்தக் காலகட்டத்தில் கவுண்டமணி பிசியாக படப்பிடிப்பிலிருந்தார். எனவே அடிக்கடி போய் அவரால் பார்க்க முடியவில்லை.
ஆனால், இடைஇடையே கட்டிடப் பணிக்குப் பணம் போதவில்லை என்று கேட்டதால் கவுண்டமணி 75% தொகையைக் கொடுத்துவிடுகிறார். அப்படி இருந்தும் மறுபடியும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், ஒருமுறை நேரில் நடைபெற்றுள்ள பணிகளைப் பார்க்கலாம் என்று கவுண்டமணி போனபோது வேலை கிட்டத்தட்டக் கால்வாசிகூட நடைபெறவில்லை. அதைப் பார்த்ததும் கவுண்டமணிக்கு அதிர்ச்சி.
கொடுத்த பணத்திற்கும் நடந்துள்ள வேலைக்கும் பொருந்திப் போகவில்லை என்று ஒரு புகாரை சொல்லும்போது அங்கே ஒரு தகராறு எழுகிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் இனிமேல் பணிகளைச் செய்யவேண்டாம். செய்தவரை போதும். வேறு ஆட்களை வைத்து முடித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக கவுண்டமணி சொல்கிறார். அதற்கு பிம்மநாயகம் ஒப்பந்த போட்ட முழுப் பணத்தைக் கொடுத்தால்தான் வெளியேறுவேன் என்று சொல்கிறார்.
அதனால் 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் போனார் கவுண்டமணி. அதற்காக விசாரணையில் சில காலம் கழித்து கவுண்டமணிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து எதிர்த்தரப்பு மீண்டும் மேல்முறையீடு செய்தார்கள். இது 2011இல் போடப்பட்டது. மீண்டும் தொடர்ந்து நடந்த வழக்கில் 2021இல் கவுண்டமணிக்குச் சாதகமாக இதிலும் தீர்ப்பு கிடைத்தது. இந்த விசாரணையில் சுமார் 61 லட்ச ரூபாய் கட்டுமான நிறுவனம் கூடுதலாக வாங்கி இருந்தது தெரியவந்தது. அதனால், நிலத்தையும் குறிப்பிட்ட தொகையையும் திரும்ப அளிக்க நீதிமன்றம் உத்தரவு போட்டது.
ஆனால், காவல்துறையினர் நிலத்தை மீட்கச் சென்றபோது எதிர்த்தரப்பு தகராறு செய்கிறது. அதனால் கவுண்டமணி தரப்பு திரும்பி வந்துவிட்டது. அதன்பின்னர் மீண்டும் இடைக்காலத் தடை பெற்றார் பிம்மநாயகம். மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்குப் போனது. அங்கே ஸ்பெஷல் மனு ஒன்று 2024 இல் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து கவுண்டமணிக்கு ஆதரவாக வழக்கில் தீர்ப்பளித்தது.
அப்படி இருந்தும் வெளியேற மறுத்து அவகாசம் கேட்டு மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தது எதிர்த் தரப்பு. அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகனிடம் எவிக்ஷன் பெட்டிசன் போட்டார்கள். அதிலும் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் மாதம் அளிக்கவேண்டிய ஒரு லட்சம் ரூபாய் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என்று ஆணை வழங்கப்பட்டது. காவல்துறை உதவியுடன் நிலத்தை மீட்கவும் எதிர்த்தரப்பு இடத்திற்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்தால் அந்தத் தடையை உடைத்து சொத்தை பறிமுதல் செய்து ஒப்படைக்க அதிகாரம் வழங்கியது. மேற்கொண்டு ஏதேனும் பிரச்சினை செய்தால், அந்தத் தரப்பைக் கைது செய்ய அதிகாரம் அளித்திருந்தது.

அதை அடிப்படையில் நிலம் சட்டப்படி மீட்கப்பட்டு கவுண்டமணியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. 20 ஆண்டுகால சட்டப் போராட்டம் இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கவுண்டமணியின் வாழ்நாளில் இது ஒரு நீண்ட சட்டப் போராட்டமாகும். இதன் மூலம் சொத்தை மீட்டதன் மூலம் கூடுதலாக வாங்கிய 60 லட்சம் ரூபாயையும் திரும்ப அளிக்க வேண்டும். அதற்காக இழப்பீடாக மாதம் 1 லட்சம் என்ற கணக்கில் வட்டியும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வட்டித் தொகை 2011 முதல் தீர்ப்பு உறுதியான மாதம் வரை வழங்கப்பட வேண்டும்.
அப்படிப் பார்த்தால் வட்டித் தொகை மட்டுமே 1கோடியே 80 லட்ச ரூபாய் வருகிறது. ஒருவேளை இந்த இழப்பீட்டைத் தரவில்லை என்றால் உரியவரின் சொத்துகளை ஜப்தி செய்வதற்கு முறையிடலாம். அதுவும் தீர்ப்பில் உள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கை இனி தொடங்க உள்ளோம். இந்த வழங்கினார் கவுண்டமணி நிறைய மன உளைச்சல் அடைந்தது உண்மை. அவர் என்னிடம் நிறைய அது பற்றிப் பேசி இருக்கிறார். என்ன தான் அவர் பிரபலமாக இருந்தாலும் வழக்கு என்று வந்தால் அது அனைவருக்கும் சமமாகவே நடக்கும்.
ஒரு பிரபல நடிகருக்கே 20 ஆண்டுகள் கழித்துத்தான் நீதி கிடைக்குமா என இதைப் பார்க்கக் கூடாது. சட்டப்படி அந்த வழக்கு விசாரணையை வைத்தே அதன் கால வரம்பு அமையும். எதிர்த்தரப்பு இந்த வழக்கைக் காலம் கடத்த வேண்டிச் செய்த சதியால்தான் இவ்வளவு ஆண்டுகள் ஆனது. கவுண்டமணிக்கு முதல் தீர்ப்பிலேயே சாதகமான தீர்ப்பு கிடைத்துவிட்டது. அதை எதிர்த்து மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்றதால் இவ்வளவு ஆண்டுகள் ஆனதே ஒழிய, நீதிமன்றம் இதைக் காலதாமதம் செய்யவில்லை" என்கிறார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications