Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன குழந்தை? 7 வருஷ ஜெயில்! பாலின டெஸ்ட் வீடியோவால் இர்பாஃனுக்கு சிக்கல்.. வீடியோவை இப்போ காணோமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மனைவியின் கருவில் இருக்கும் தனது குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்டு சிக்கலில் சிக்கிய பிரபலான யூட்யூபரான இர்ஃபான் தற்போது அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கி உள்ளார். இர்பானின் வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதிய நிலையில் தற்போது அவரே இந்த வீடியோவை நீக்கி இருக்கிறார்.

தமிழ் யூடியூபர்களில் மிகவும் பிரபலமான நபராக அறியப்படுபவர் இர்பான். கொரோனா காலத்திற்கு முன்பாக அவ்வளவாக சப்ஸ்கிரைபர்ஸ் இல்லாத நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அவரது இமேஜ் அதிகரிக்க தொடங்கியது.

Irrfan deleted the video announcing the gender of his unborn child

இலட்சக்கணக்கான சப்ஸ்கிரைப்ர்கள் அவரை பின் தொடர்ந்த நிலையில் வெளிநாடுகளில் சென்று வீடியோ போட்ட முதல் ஃபுட் ரீவியூவர் என்ற பெருமையை இர்ஃபான் பெற்றார். தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பயணம் செய்த அவர் பல்வேறு வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இர்பான்: அதே நேரத்தில் சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் இர்ஃபானுக்கு புதிதல்ல .அவர் அடுத்தடுத்து புட் ரிவ்யூ செய்த ஹோட்டல்கள் பழைய கெட்டுப்போன சிக்கனைக் கொடுத்து புகாரில் சிக்கிய நிலையில், அதற்கு இர்ஃபானை விமர்சிப்பதும் என தொடர்ந்து புகார்கள் வந்தது. இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் இர்பான் வீடியோ வெளியிட்டு இருந்தார் அந்த விவகாரம் முடிந்து போனது.

சர்ச்சை: அதற்குப் பிறகு தனது திருமணத்திற்கு பல்வேறு முக்கிய பிரபலங்களையும் அழைத்து பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். அதற்கு பிறகு அவரது கார் மோதி விபத்து சர்ச்சையிலும் இர்ஃபானின் பெயர் அடிபட்டது. அந்த பிரச்சனையும் ஒரு வழியாக ஓய்ந்த நிலையில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் இர்பான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி கர்ப்பிணியாக இருப்பதை யூட்யூபில் தெரிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

குழந்தையின் பாலினம்: இந்த நிலையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதும் அறிவிப்பதும் சட்டப்படி குற்றம். இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு ஸ்கேன் சென்டர்கள் இருந்தாலும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்க மாட்டார்கள்.

கடும் கண்டனம்: இதன் காரணமாக துபாய் சென்ற இர்ஃபான் அங்கு தனது குழந்தையின் பாலினத்தை அறிந்ததோடு அதை ஒரு பார்ட்டி போல கொண்டாடி வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து இருந்தனர். அதே நேரத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தது சட்டவிரோதம் எனவும் எனவே இர்பான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

Irrfan deleted the video announcing the gender of his unborn child

சுகாதாரத்துறை: இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக சுகாதார துறையின் கவனத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சுகாதாரத் துறை இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பாக இர்பான் மீது காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியது.

வீடியோ நீக்கம்: இதனைத் தொடர்ந்து இதுகுறித்து இர்பான் தரப்பிடம் யூ டியூப் நிறுவனம் விளக்கம் கேட்டதாகவும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கடுத்து மொத்தமாக யூடியூப் சேனலே முடங்குவதை தவிர்க்கும் வகையில் யூடியூபில் இர்பானே அந்த வீடியோவை தற்போது யூட்யூபில் இருந்து நீக்கி இருக்கிறார். சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ பிரைவேட் செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+