விஜயை கட்டிப்பிடித்து.. ஒரே புகழாரம்.. கண்கள் சிவந்த திருமா? சஸ்பெண்ட்டால் தவெக தாவும் ஆதவ் அர்ஜுனா?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த விவகாரம்.. அவர் பேசிய விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. இதனால் எங்கே ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேற வாய்ப்புகள் உள்ளன.
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதில், ஆளும் திமுகவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்து ஆதவ் அர்ஜுனா கடுமையாக பேசி இருந்தார். அதில், பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது!" மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது; மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள்;

அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்; பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது; தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு எடுத்துவிட்டார்கள். ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் அரசியல் மூலம் ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம்; தமிழ்த் தேசியம் என்றாலும், பிரபாகரன் சொன்னது போல எல்லோரும் சமம் என்பதுதான்.
கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலைச் செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. "மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது, என்றெல்லாம் பேசினார்.
கைதட்டி கட்டிப்பிடித்தார்: அதோடு நிற்காமல் விஜய் திமுகவை பற்றி பேசும் போதெல்லாம் அதை ஆதவ் அர்ஜுனா கைதட்டி வரவேற்றார். அதோடு நிற்காமல் விஜய் பேசி முடித்ததும் அவரை கட்டி அணைத்து பேசினார். அதோடு இல்லாமல் விஜய்க்கு ஆதரவாக.. மன்னராட்சியை ஒழிப்போம் என்றெல்லாம் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த விவகாரம்.. அவர் பேசிய விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் ஆதவ் அர்ஜுனா. 6 மாதங்கள்தான் சஸ்பெண்ட் என்றாலும் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேற வாய்ப்புகள் உள்ளன.
இதனால் எங்கே ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயுடன் நெருக்கம் என்பதை தாண்டி விஜய்க்கு பொருளாதார ரீதியாக சப்போர்ட் தேவை. அவர் சினிமாவில் சம்பாதித்த தொகையை வைத்து தேர்தலை சந்திக்க முடியாது.தேர்தல் நிதி தேவை. அதோடு தேர்தல் வியூகம் வகுக்க ஆட்கள் தேவை.
இது அனைத்தும் ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ளது. அவர் நிதி தொடர்பாகவும் சப்போர்ட் செய்ய முடியும்.. ஆலோசனை வழங்கவும் அவரிடம் நிறுவனம் உள்ளது. இதனால் விஜய் உடன் ஆதவ் அர்ஜுனா கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications